மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்
ஆஹா தமிழ் ஓடி டியில் மே-19 ல் வெளியான மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் எப்படி இருக்குன்னு பார்க்க போறோம்.
கொன்றால் பாவம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் படம் தான் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.
முதல்ல இந்த படத்தோட இயக்குனருக்கு கிரைம் திரில்லர் அப்படின்னா அல்வா சாப்பிடற மாதிரி தன்னோட திரைக்கதை மூலமும் காட்சி அமைப்புகள் மூலமும் படம் பார்க்கும் ரசிகனை இருக்கை நுணிக்கே கொண்டு சென்று விடுவார்..
அந்த அளவிற்கு கதையையும் காட்சியையும் விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் பலே கில்லாடி இந்த தயாள் பத்மநாபன்

முதல் பாதில வரலட்சுமி பிளான் பண்ற திரைக்கதையே பயங்கர விறுவிறுப்பாக நகரும் தருணத்தில் இரண்டாம் பாதியில் பிக் பாஸ் புகழ் ஆரவ் வந்த பிறகு படு வேகமாக சூடு பிடிக்கிறது .படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயமாக இருக்கை நுணிக்கே வந்துவிடுவார்கள் இருந்தாலும் இது ஆஹா தமிழ் ஓடி டியில் வெளியாகதால் வீட்டில் பார்க்கும் அனைவரும் சோபாவின் நுணியில் வருவது உறுதி.
ஒரே படத்தில் கிரைம்,திரில்லர், சஸ்பென்ஸ் வைத்து படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன் படத்தின் கேமராவும், பின்னணி இசையும், குறிப்பாக எடிட்டர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது படத்தின் காட்சிகள் அவ்வளவு அழகாக எடிட் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

படத்தோட ஆரம்பத்துல ஒரு சில காட்சிகள் இப்படி எல்லாம் இருக்குமா அப்படின்னு நம்ம மண்டைய சொரிகின்ற நேரத்துல தன் திரைக்கதை மூலம் அடுத்த அடுத்த வரக்கூடிய காட்சி அமைப்புகள் மூலம் அந்த சந்தேகத்தை படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணத்தில் இருந்து தூக்கி விடுகிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்

ஒரு ஊருக்குள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தா சாதாரணமா அந்த ஊர் மக்கள் அந்த காவல் நிலையத்தை தாண்டி நடந்து செல்லும் போது ஒரு பதட்டமோ பயமோ இல்லாம போய்டுவாங்க ஆனா அதே சாமானிய மக்கள் அந்த காவல் நிலையத்துக்கு உள்ள வரணும்னா ஒரு பயமும் ஒரு விதமான படபடப்போ இருக்கும்ல அப்படித்தான் இருக்கும் இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு வரும்.
வாழ்த்துக்கள் இயக்குனர் தயாள் பத்மநாபன் அவர்களே.