• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“குளியலறையில் டவல் சண்டைக்காட்சியை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது” ; ‘டைகர் 3’ நடிகை மிஷ்ஷேல் லீ

by Tamil2daynews
October 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“குளியலறையில் டவல் சண்டைக்காட்சியை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது” ;
‘டைகர் 3’ நடிகை மிஷ்ஷேல் லீ

அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்கு பெயர் பெற்ற ஹாலிவுட் நடிகை மிஷ்ஷேல் லீ, ஸ்கார்லட் ஜாக்சனுடன் ‘பிளாக் விடோ’விலும், ஜானி டெப்புடன் ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்’ படத்திலும் பிராட் பிட்டுடன் ‘புல்லட் ட்ரெய்ன்’ மற்றும் டாம் ஹார்டியுடன் ‘வெனோம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.. தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் கண்கவர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கத்ரீனாவுடன் நீண்ட நேரம் இடம்பெறக்கூடிய ரொம்பவே வைரலான துருக்கி குளியலறை சண்டைகாட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

 ‘டைகர் 3’ டிரைலரிலிருந்து அந்த டவல் சண்டைக்காட்சி மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியிருக்கிறது என்பதில் மிஷ்ஷேல் லீக்கு பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை.. கத்ரீனாவும் தானும் இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஒத்திகை பார்த்தோம் என கூறுகிறார் மிஷ்ஷேல் லீ.

அவர் கூறும்போது,
“நான் ஆச்சர்யப்படவில்லை. நாங்கள் இதை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் நாங்கள் இந்த சண்டைக்காட்சியை கற்றுக்கொண்டதுடன் பயிற்சியும் எடுத்துக்கொண்டு அதன் பின்னரே இதை படமாக்கினோம். இதற்காக வடிவமைக்கப்பட்ட அரங்கு உண்மையிலே அழகியலாக இருந்ததுடன் இந்த சண்டைகாட்சியில் நடிப்பதற்கு உண்மையிலேயே வேடிக்கையாகவும் இருந்தது. இப்ப்டி இரு சர்வதேச திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது அற்புதமாக இருந்தது” என்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது கத்ரீனாவின் அர்ப்பணிப்பு உணர்வை பார்த்து அவரை இன்னும் புகழ்ந்து தள்ளுகிறார் மிஷ்ஷேல். அவர் கூறுகையில், “கத்ரீனாவால் அழகாகவும் தொழில்முறை நடிகையாகவும் இருக்க முடிந்தது. துல்லியமான நகர்வுகளை பெற கடினமாக அவர் உழைத்ததுடன் அனைத்து நகர்வுகளுமே வேகமாக இருப்பதையும் அவர் உறுதி செய்தார். நடனத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தோம்” என்கிறார்..

மிஷ்ஷேல் கூறுகையில் டவல்களால் அவர்களது உடல்களை சுற்றிலும் மறைத்தபடி இந்த குளியலறை காட்சியில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார்

மேலும் அவர் கூறும்போது, “குறிப்பாக அலமாரி காட்சியில் நடித்ததது முக்கிய சவால்களில் ஒன்றாக இருந்தது. எங்களது டவல்கள் குறிப்பிட்ட சரியான இடங்களில் பொருந்தியிருக்க வேண்டியிருந்தது. அதனுடன் அதிகப்படியான நகர்வுகளுடன் இந்த சண்டைக்காட்சியை படமாக்கியது நிச்சயமாக ஒரு சவால் தான். சில நேரங்களில் டவல்களின் முக்கிய பகுதி கிழிந்துபோய் அதை தைத்து பயன்படுத்தியதும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “இன்னொரு சவால் என்னவென்றால் பார்ப்பதற்கு அபாயகரமானதாகவும் வலிமையானதகவும் தெரிந்தாலும் ஒருவருக்கொருவர் எங்களை காயப்படுத்தி விடாமல் இருப்பதற்காக நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு சரியான தூரத்தை கடைபிடிக்க வேண்டி இருந்தது. ஒருவேளை அப்படி அவரை நிஜமாகவே நான் தாக்கியிருந்தால் உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா ?. ஆனால் நான் தொழில்முறை தெரிந்தவள். அதனால் நாங்கள் எங்களை தாக்கிக்கொள்ளாமலேயே கேமரா முன்பாக அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தாலும், அனைத்தும் ரொம்பவே மென்மையாக நடந்தன” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமாக ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் இந்த ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. இந்தப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
Previous Post

லோகி ஒரு திரைச் சித்தன்! மன்சூர் அலிகான் புகழாரம்!!

Next Post

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா !!

Next Post

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா !!

Popular News

  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி !! ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

    0 shares
    Share 0 Tweet 0
  • இளம் இயக்குனர்களை அழைக்கும் அருண் குமாரசாமி..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

November 10, 2025

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

November 10, 2025

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

November 10, 2025
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

November 8, 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

November 8, 2025

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

November 8, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.