விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன்
பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழரசன் திரைப்படம் மகனை கப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் கதை. நியாயமான விசயத்திற்குக் குரல் தந்ததற்காக சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி தமிழரசன், அவரது மகனுக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் பணம் இருந்தால் மட்டுமே மகனைக் காப்பாற்ற முடியும் எனும் சூழலில், அவரது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் கோபமடையும் தமிழரசன், மகனைக் காக்க முழு மருத்துவமனையையும், துப்பாக்கி முனையில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். போலீஸ் அவரை பிடிக்கத் திட்டமிடுகிறது. பல தடைகளைக் கடந்து தன் மகனைத் தமிழரசன் காப்பாற்றினாரா என்பதே இப்படத்தின் கதை.

ZEE5 2023 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை பாகம் 1 திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.