ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 ஒரிஜினல் தொடரான ‘தாஜ் – டிவைடட் பை பிளட்’ இன் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது– அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரில் பெருக்கெடுத்து ஓடிய ரத்த வெள்ளத்தை இந்தத் தொடர் படப்பிடித்துக் காட்டுகிறது

by Tamil2daynews
February 20, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 ஒரிஜினல் தொடரான ‘தாஜ் – டிவைடட் பை பிளட்’ இன் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது– அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரில்  பெருக்கெடுத்து ஓடிய ரத்த வெள்ளத்தை இந்தத் தொடர் படப்பிடித்துக் காட்டுகிறது

 

ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5,  நசீருதீன் ஷா, தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி,தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தாஜ் – பிளட் பை பிளட்‘ திரைத் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது.  உண்மை  நிகழ்வுகளின் மன எழுச்சியால் உருவான, ‘தாஜ் – டிவைடட் பை பிளட்” இன் கதைக்களம்  மன்னர் அக்பரின் (நசிருதீன் ஷா ஏற்றிருக்கும் பாத்திரம்) வாழ்க்கை மற்றும் முகலாய அரியணையைக் கைப்பற்ற  அவரது மகன்களுக்கு இடையே ரத்த வெள்ளத்தில் நடந்த போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது.  அரியணைக்கான  வாரிசுப் போட்டி மற்றும் உணர்ச்சி மிகுந்த குடும்பப் போராட்டங்கள் நிறைந்த இந்த தொடர்10 பகுதிகளாக 2023 மார்ச் 3 ஆம் தேதி முதல் ZEE5 இல் வெளியிடப்படும்.

கான்டிலோ டிஜிட்டல் தயாரிப்பில் வில்லியம் போர்த்விக் ஷோ ரன்னராகவும், சைமன் ஃபாண்டவுஸ்ஸோ இதன் எழுத்தாளராகவும் மற்றும் ரான் ஸ்கால்பெல்லோ இயக்குனராகவும் இணைந்து உருவான, ‘தாஜ் – டிவைடட் பை பிளட்‘ தொடரில், நசீருதீன் ஷா பேரரசர் அக்பராகவும், அதிதி ராவ் ஹைதாரி அனார்கலியாகவும், ஆஷிம் குலாட்டி இளவரசர் சலீமாகவும், தஹா ஷா பாதுஷா இளவரசர் முராத் ஆகவும், ஷுபம் குமார் மெஹ்ரா இளவரசர் தனியலாகவும், சந்தியா மிருதுல் அரசி ஜோதா பாயாகவும், ஜரீனா வஹாப் அரசி சலீமாவாகவும் , பத்மா தாமோதரன் அரசி ருக்யா பேகமாகவும், ராகுல் போஸ் மிர்சா ஹக்கிமாகவும் மற்றும் தர்மேந்திரா ஷேக் சலீம் சிஷ்டியாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தத் தொடரில் சுபோத் பாவே, ஆயம் மேத்தா, தீப்ராஜ் ராணா, ஷிவானி தங்க்சலே, பங்கஜ் சரஸ்வத், திகம்பர் பிரசாத் மற்றும் சக்காரி காஃபின் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

டிரைலர் இணைப்பு  – https://youtu.be/4eOU0Fa1QU4

டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைப் போலவே,  அக்பர் தனது ஆட்சி காலத்தில்,  அவரது மகத்தான பேரரசின் அரியணையில் அமரும் தகுதி பெற்ற மரபுவழி  வாரிசை அடையாளம் காணும் முயற்சியை மேற்கொண்டபோது, அவரது மகன்களுக்கு இடையே போர் மூண்டு இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓட வழிவகுத்த  கதையை இந்த தொடர் காட்சிப்படுத்துகிறது. முகலாய சகாப்தம் தொடர்பான பெரும்பாலான கதைகள் அழகான ரோஜா வண்ணகாட்சிகள் நிறைந்த காதல் கதைகளாக பின்னப்பட்டு சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவைகளுக்கு மத்தியில் இந்த வரலாற்று நாயகர்களை சாதாரண மனிதர்களைப்போலவே , லட்சியங்களும், பேராசைகளும் குறைபாடுகளும் கொண்டவர்களாக தாஜ் – டிவைடட் பை பிளட் என்ற இந்த தொடர் காட்சிப்படுத்துகிறது.  தாஜ் டிவைடட் பை பிளட் – தொடரானது  உணர்ச்சிப்பெருக்கு, அரசியல் மற்றும் சோகம் நிறைந்த;  பொறாமை வஞ்சகம், சூழ்ச்சி, அன்பு , வெறி, மற்றும் காதல்; கலை, கவிதை மற்றும் கட்டிடக்கலை ஆகிய கலவையான வாழ்க்கைச்சூழலில் மிக முக்கியமாக அதிகாரத்தை  கைப்பற்றும் போட்டியில் வாரிசுகளுக்கிடையே ரத்தம் சொட்டச்சொட்ட நடந்தேறும் போரை வியக்கத்தக்கவகையில் முழுமையாக காட்சிப்படுத்திக் காட்டுகிறது. 

இயக்குனர் ரான் ஸ்கால்பெல்லோ கூறுகையில், “நான் தீவிர அர்ப்பணிப்போடு இந்திய வரலாற்றை பின்பற்றி வருபவனாதலால், முகலாய பேரரசை முன்னிறுத்தும் தொடரை இயக்கும் வாய்ப்பு  கிடைத்தபோது மிகவும் பரவசமடைந்தேன். முகலாய வரலாறு குறித்த பல்வேறு பதிப்புகள் இருப்பதால், இந்த வரலாற்று நாயகர்களின் அறியப்படாத மர்மக்கூறுகளின் முடிச்சை அவிழ்க்க நான் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது, தாஜ் – டிவைடட் பை பிளட் தொடர் அந்த ஒரு அம்சத்தில்தான் மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கிறது- இது நாள் வரை இந்தப் பேரரசின் மறைக்கப்பட்ட அறியப்படாத  வரலாற்று செய்தியாக,   சாதாரண மனிதர்களைப் போலவே லட்சியங்கள், பேராசைகள், மற்றும் குறைபாடுகள் கொண்டவார்களாக இந்த வரலாற்று நாயகர்களும் இருப்பதை உங்களால் அடையாளம் காணமுடியும். மேலும், அதிகாரத்தை அடைவதற்கான  போர் மற்றும் வாரிசுபோட்டிகள் உலகளாவிய நிகழ்வுகள் என்பதால்  இந்தத் தொடர் உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று தெரிவித்தார் .

நசிருதீன் ஷா கூறுகையில், “தாஜ்– டிவைடட் பை  பிளட் இன் கதைக்களம் முகலாயப் பேரரசில் நிகழ்ந்த  போர், வாரிசுரிமை மற்றும் அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவற்றின் பின்னனியில் அமைந்தது. பேரரசர் அக்பரின் சாம்ராஜ்யத்தில் யாரும் எளிதில் நெருங்கமுடியாத புனிதமான உள்வட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் விளையாட்டுக்களை இந்த நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.. முகலாய வரலாற்றை இதற்கு முன் பலர் மீள் உருவாக்கம் செய்திருந்தாலும், தாஜ் – டிவைடட் பை பிளட் அதன் ஆய்வு செய்யப்படாத மற்றும் அறியப்படாத பகுதிகளின் மீது தனது கவனத்தை செலுத்தியிருப்பதால், பழைய மற்றும் புதிய பார்வையாளர்கள் கட்டாயமாக காணவேண்டிய ஒன்றாக இதைத் திகழச்செய்கிறது. உலகெங்கிலுமிருந்து வந்த மிகச்சிறந்த படைப்பாளிகளின் ஒரு குழு இந்தத் தொடருக்கு உயிர் கொடுத்துள்ளது. எனது அனுபவத்தில் இதுநாள் வரை நான் கண்டவற்றிலிருந்து இது மாறுபட்ட ஒன்றாக,  இந்த ஆண்டின் மனதை விட்டு அகலாத மிகவும் உற்சாகமளிக்கும்  தொடராக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

அதிதி ராவ் ஹைதாரி கூறினார், “நான் எப்போதும் வரலாற்றை விரும்பி ரசித்திருக்கிறேன்; நமது பாடப்புத்தகங்களுக்கு வெளியே பல மிகச்சிறந்த கதைகள் எப்பொழுதும் இருந்துள்ளன. அனார்கலி பாத்திரத்தை ஏற்க என்னிடம் சொன்னபோது நான் எவ்வளவு உற்சாகமாக உணர்ந்தேனோ அதே அளவு பயமாகவும் உணர்ந்தேன். அனார்கலி  என்ற கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சின்னம், அவளுடைய அழகும் கருணையும் இணையற்றதாக ஒருவரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக முகல்-ஏ-ஆசம் திரைப்படத்தில் மயக்கும் மதுபாலாவால் அந்தப் பாத்திரம் எவ்வாறு உயிர்பெற்றெழுந்தது என்பது குறித்து நான் முதலில் மிரட்சியடைந்தேன். இயக்குனர் ரான் ஸ்கால்பெல்லோ மற்றும் எழுத்தாளர்களான வில்லியம் மற்றும் சைமன் ஆகியோருடனான சந்திப்பு இதில் பங்கேற்க எனக்கு துணிச்சலை அளித்தது.

அனார்கலி மிகவும் தனித்துவமான முறையில்  எழுதப்பட்டிருந்த காரணத்தால் அதை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு புதிய ஒரு சவாலாகத் தோன்றியது. எங்கள் கலந்துரையாடல்களில் இருந்த கூட்டுத் திட்டமிடல் வழிமுறைகள் இதை எனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள என் பயணத்தை இந்த உலகத்தினுள் தொடர என்னை ஊக்குவித்தது.. அனார்கலியாக நடிப்பது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் மற்றும் பொறுப்பு,  அதற்கு நான் முழுமையாக நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்”.

Previous Post

மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்..!

Next Post

” பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

Next Post

" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

    0 shares
    Share 0 Tweet 0
  • எருமை சாணி ஹரிஜாவை ஞாயபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!