• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

‘நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

by admin
March 1, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
‘நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி
0
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ஹரிஷ் உத்தமன்

பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம்.

நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

நடிகர் ராஜ்மோகன் பேசும்போது

ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார்.

நடிகர் எரும சாணி விஜய்

இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சுந்தர்.சிக்கும் எனது நன்றி.

நடிகர் வினோத் பேசும்போது

மீசைய முறுக்கு படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் எல்லோர் மனதிலும் பதியும்படி இருந்தது. அதேபோல் இப்படத்திலும் நல்ல கதாபாத்திரத்தில் PT மாஸ்டராக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.

நடிகர் பழைய ஜோக் தங்கதுரை

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நண்பனாக நடித்திருக்கிறேன். அவர் படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நண்பர் தான்.

கதையாசிரியர் தேவேஷ் பேசும்போது

கதை, திரைக்கதை மற்றும் வசனம் போன்றவற்றை நானும் ஸ்ரீகாந்தும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.

நடிகர் RJ விக்னேஷ் காந்த்

சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது ஹிப்ஹாப் ஆதி மற்றும் சுந்தர்.சி ஆகியோர் தான். நான் கேட்ட கதாபாத்திரத்தையே எனக்கு கொடுத்ததற்கு ஆதிக்கு நன்றி. இப்படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக ‘ஆத்தாடி’ பாடல் காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது.

நடிகர் சுட்டி அரவிந்த் பேசும்போது

இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சுந்தர்.சி அண்ணாவுடன் மிக நெருக்கம் ஏற்பட்டது.

கதாநாயகி அனகா பேசும்போது

தமிழில் முதல் படம். ஹாக்கி வீராங்கனையாக நடித்திருக்கிறேன். ஆதியுடன் நடித்ததில் மகிழ்ச்சி. இசையைத் தாண்டி அவர் நல்ல நடிகரும் கூட என்பதை மீசைய முறுக்கு படம் நிரூபித்தது.

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு பேசும்போது

இப்படத்தை பற்றி குறிப்பிட்டு யாரையும் கூறமுடியாது. படத்தை விளையாட்டு களமாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதுமையான களமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாண்டிசேரியைத் தேர்ந்தெடுத்தோம். அந்த களத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து பயிற்சியளித்தோம். சாதாரண களத்தில் விளையாடுவதைவிட ஹாக்கி டர்ஃபில் விளையாடுவது மிகவும் கடினம். நிஜ வீரர்களுக்கே தொடர்ந்து விளையாடுவது இயலாது. அப்படி இருக்கையில் இவர்கள் அனைவரும் நாள் முழுக்க இடைவிடாமல் நடித்தார்கள். தினமும் ஒருவர் மயங்கி விழுவார். ஆதிக்கு கழுத்தில் அடிபட்டும் மனம் தளராமல் சிறிது இடைவெளியில் மீண்டும் நடித்து முடித்தார். மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய சொந்த படமாக நினைத்து பணியாற்றினார்கள்.

பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் என்றாலே மது அருந்துவார்கள், புகைபிடிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் நிலவும். ஆனால் இப்படத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் இளைஞர்கள் பெருமை படலாம்.

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது

அதிக வாய் பேசிய என்னை ‘ஆம்பள’யில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’-ல் என் கனவை நனவாக்கி ‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.

இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார்.

மீசைய முறுக்கு படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள்.
பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார். ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெளியீட்டிருக்காக கோயம்புத்தூருக்கு சென்றபோது ‘எரும சாணி’ விஜய்யின் அறிமுகம் கிடைத்தது.

கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும்.

மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும்.

இப்படம் எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

இணையதளத்தில் பார்த்த பலரை இன்று நேரில் பார்க்கிறேன்.

‘எரும சாணி’ விஜய்யை எனக்கு பிடிக்கும். நகைச்சுவையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரை கதாநாயகனாக உருவாகிவிடுவார்கள். சிறிது காலத்திற்கு நகைச்சுவையில் வெற்றி பெற்று, அதன்பிறகு நாயகனாகலாம்.

ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

என் மனைவியிடம் மீசைய முறுக்கு படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு வெளி வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றார்.
கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்.

‘நட்பே துணை’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில்,

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, கலைமாமணி விருது பெற்ற பத்திரிகையாளர் மணவை பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags: Hip Hop AadhiSundar cசுந்தர் சிஹிப் ஹாப் ஆதி
Previous Post

கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் / இயக்குனர் சசிகுமார்!

Next Post

சஸ்பென்ஸ் திரில்லர் கதை “சத்ரு”!

Next Post
சஸ்பென்ஸ் திரில்லர் கதை “சத்ரு”!

சஸ்பென்ஸ் திரில்லர் கதை “சத்ரு"!

Popular News

  • மெட்ராஸ் ஃமாபியா கம்பெனி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தாவூத் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

November 19, 2025
அகண்டா 2: தாண்டவம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

November 19, 2025
‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

November 19, 2025
மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்  பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

November 19, 2025
ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

November 19, 2025

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!

November 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.