• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

by Tamil2daynews
November 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர்  2 “  பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )”  படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில்  அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார்.  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில்  மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர்  2 “  வாக இப்படம் உருவாகிறது.

இந்நிறுவனத்தின்  முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje )  விமர்சகர்களிடம் பெரும்  பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.

Imageஇந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று ஹைதராபாத்தில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில்  கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் திரு வீர் ,  மசூடா  ( Masooda )  மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )  போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் நடிக்கும் இந்த புதிய படம் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் மற்றும் பொலிமேரா போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.

இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள்

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ்

தொழில் நுட்பக் குழு

தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் – பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு  – C.H. குஷேந்தர்
இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி
எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்
உடை  வடிவமைப்பாளர் –  – அனு ரெட்டி அக்கட்டி
பாடலாசிரியர் – பூர்ணசாரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Previous Post

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

Next Post

நாயகன் – விமர்சனம்

Next Post

நாயகன் - விமர்சனம்

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.