• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

by Tamil2daynews
November 2, 2025
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தடை அதை உடை – விமர்சனம் 

அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’.

நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தை எழுதி இயக்கியுள்ள அறிவழகன் முருகேசன்.

மூன்று இளைஞர்கள் (குணா பாபு, திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது), ஒரு ஜீப்பில் லிப்ட் கேட்கிறார்கள். போகும் வழியில் ஜீப்காரன் இவர்களை விசாரிக்க, தாங்கள் மூவரும் முறையே சினிமா இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், என்கிறார்கள். அவர்கள் எடுத்த படம் தோல்வி என்கிறார்கள்.

என்ன கதை என்று கேட்க, தங்கள் படத்தின் கதையைச் சொல்கிறார்கள்.

பட்டுக்கோட்டை பகுதியில் ஆளுங்கட்சியில் செல்வாக்கு உள்ள நபரின் அடியாளாக இருக்கிறார் டைரக்டர். அதே கட்சியில் செல்வாக்கு இழந்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாத ஒரு நபர் வன்மம் கொள்கிறான், இயக்குனரை தங்கள் வசம் இழுத்து, குட்டையைக் குழப்ப நினைக்கிறான்.

செல்வாக்கு உள்ள ஆளுக்கும் அவனது அக்காவுக்கும் மகன் மகளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது என்பதில் குடும்பச் சண்டை. அதே நேரம் அந்த செல்வாக்கு நபர் ஒரு ஏழைக் குடும்பத்தை கொத்தடிமையாக வைத்து இருக்கிறான்.

முதல் மகனும் கொத்தடிமையாகப் போய்விட்ட நிலையில் இரண்டாவது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முயல, அதை செல்வாக்கு நபர் தடுத்து அடிக்க, இரண்டு பக்கமும் கொலைகள் விழுகிறது. ஒருவழியாக சிறுவன் பள்ளியில் சேர்கிறான் இப்படி ஒரு கதையை இயக்குனர் சொல்ல தயாரிப்பாளர் அதை குப்பை என்று சொல்லி நிராகரிக்கிறார்.

அடுத்து மேற்படி இயக்குனர் எழுத்தாளர் நண்பர்கள் சென்னையில் யூடியூப் வைத்து நடத்துகிறார்கள், அதில் மோசமான அரசியல்வாதி ஒருவனை பற்றி அவனுக்கே தெரியாமல் அவனது கெட்ட விசயங்களை வெளிப்படுத்த முயல அவன் இவர்களை கொலை செய்ய வருகிறான். நண்பர்களை ஒரு அகோரி காப்பாற்றுகிறார்.

அடிக்கடி யூடியூபில் வீடியோ போடும் ஒரு பெண், கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் தனக்கு பிள்ளை இல்லை என்று வீடியோ போட, அதற்கு வந்த ஆபாச கமெண்டுகளால் மனம் உடைந்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு சாகிறார். அந்த பெண்ணின் தம்பி அந்த ஆபாச கமென்ட் போட்டவனைக் கொலை செய்யத் தேடுகிறார்.

இயக்குனர் சொன்ன இரண்டாவது கதையும் திருப்தி இல்லாத நிலையில் தயாரிப்பாளர், கடைசியாக ஒரு சான்ஸ் கொடுக்கிறார். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

திருக்குறள் படத்தில் பழந்தமிழ் வசனங்கள் பேசி நடித்த குணா பாபு, அங்காடிதத் தெரு மகேஷ், பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகம்மது, வேல்முருகன் நடிப்பில் வந்திருக்கும் படம். காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி இருக்கும் படம்.

நல்ல விஷயங்கள் உள்ள கதை. வயல் வெளி, ஓடை, புள் காடு என்று கிராமத்து லோக்கேஷன்களை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் தோட்டா மணிகண்டனும், தங்கப் பாண்டியனும். சாய் சுந்தர் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். டாய்சியின் படத்தொகுப்பு பலவீனமே.

”எதிர்காலத்தில் இங்கே ரெண்டே ஜாதிதான் இருக்கும். ஒண்ணு யூடியூபர் ஜாதி. இன்னொன்று சப்ஸ்கிரைபர் ஜாதி” இப்படி படத்தின் வசனங்கள் சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் வெகு சாதரணமாகவும் கடக்கின்றன.

”போதையில் சிக்கி வாழ்வை இழக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்க அரசியல்வாதி”அவர்களை எல்லாம் திருத்தவே முடியாது. பிச்சை எடுக்கக் கூட தயங்காதவர்கள்” என்று அவர் பதில் சொல்ல, அதையே” படித்து பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உங்கம் திட்டம் என்ன? ”என்று கேள்வியை மாற்றினால் அந்த பதில் எப்படி தவறாக மாறும்.?

இப்படி இயல்பான கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற்று அதையே வேறு கேள்விகளாக மாற்றி, அரசியல்வாதியின் பதில்கள் திமிராக இருப்பது போலக் காட்டும் உத்தி… இப்படி தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட இந்த உத்தி இந்தப் படத்தில் சிறப்பு.

அதே போல சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டு பிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமென்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.

ஒன்று ஓவராக நடிப்பது அல்லது நடிக்காமல் சும்மாவே நிற்பது என்ற முடிவில் இருக்கும் நடிகர்கள், நேர்த்தி இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள், ஆசைகாட்டி மோசம் செய்யும் திரைக்கதை… இந்தக் குறைபாடுகளை நீக்கி இருக்கலாம்.

முதல் நாள் பள்ளியில் சேர்க்காமல் கொத்தடியின் மகனையும் அவனைச் சேர்க்க வந்த கொத்தடிமையையும் அடித்து விரட்டி அலைக்கழிக்கும் ஆசிரியர், அடுத்த நாள் அவர்கள் வரவேண்டும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். இப்படி பல கதாபாத்திரச் சீர்குலைப்புகள் படத்துடன் ரசிகனை ஒன்ற விடாமல் தடுக்கின்றன.

இந்தப் படத்துக்கு கத்தி கபடா வாங்கவும் சிவப்பு பெயின்ட் வாங்கவுமே பெரிதாக செலவாகி இருக்கும் என்ற அளவுக்கு படம் முழுக்க யாராவது யாரையாவது சதக் சதக் என்று குத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒரு சில கதாபாத்திரங்கள் இந்த படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கின்றன.

மொத்தத்தில் தடை அதை உடை திரைப்படத்தை இயக்குனரே உடைத்து விட்டார்.
Previous Post

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

Next Post

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

Next Post

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் உதயநிதி – மான் கறி” விவகாரம் – விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • Paramapatham Villaiyattu Movie Stills

    0 shares
    Share 0 Tweet 0
  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.