• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

by Tamil2daynews
October 31, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.
அஜித்குமார் நடிப்பில் ‘மங்காத்தா’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் ‘பிக்பாஸ்’ மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியான ‘ஈமோஜி’ வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
Double XL: Mahat Raghavendra Opens Up On Making His Bollywood Debut With Sonakshi Starrer Film
உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகையில், மாறுபட்ட கருப்பொருளில் இப்படம் உருவாகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், இப்படத்தை சத்ரம் ரமணி இயக்குகிறார். ஜாகீர் இக்பால் மற்றொரு நாயகனாக நடிக்கிறார்.
படம்  குறித்து நடிகர் மஹத் ராகவேந்திரா கூறியதாவது… ”சினிமா என்பது , பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி. நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள் . கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும்  உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். இப்படத்தில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குநர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம்.
ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்” என்றார்.
Double XL: Mahat Raghavendra on working with Sonakshi and Huma
மேலும் மஹத் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறுகையில்.. 
”ஒரு கதாப்பாத்திரத்தின் திரை நேரத்தை விட அது மக்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதே முக்கியம். அந்த வகையில் இப்படம் எனக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். சத்ரம் ரமணி இயக்கத்தில் நம் காலத்தின் மாபெரும் நாயகிகள் இருவர் இணைந்து நடிக்கும் அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். நான் எப்போதும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையே தேடுகிறேன். தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த ஹிந்தி படம் எனக்கு ஒரு புதிய சவாலையும் புதிய பார்வையாளர்களையும் தந்துள்ளது” என்றார்.
மேலும், “இந்தப் படம் எனக்கு ஜாஹீருடன் நல்ல நட்புறவை ஏற்படுத்தி தந்துள்ளது. திரைத்துறையில் உண்மையான நட்பை  கண்டுபிடிப்பது மிகவும் அரிதானது. இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உதவுகிற ஒரு முழுமையான நண்பரைக் கண்டுபிடித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்றார்.
‘டபுள் எக்ஸ்எல்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Previous Post

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்த மன்சூர் அலிகானின் புதிய யோசனை!

Next Post

‘பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன்

Next Post

'பெடியா' படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் 'தும்கேஸ்வரி' பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன்

Popular News

  • காந்தாரா சாப்டர் -1 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

    0 shares
    Share 0 Tweet 0
  • பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”– இயக்குனர் மாரி செல்வராஜ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காந்தாரா சாப்டர் -1 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 2, 2025

பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”– இயக்குனர் மாரி செல்வராஜ்

October 2, 2025

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

October 2, 2025

இட்லி கடை – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

October 2, 2025

மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடிகர் ஷபீர் கல்லரக்கல்;

October 2, 2025

கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

October 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.