ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.
படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திநந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம், அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய படைப்பாக ரசிகர்களை மயக்கவுள்ளது.
இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன், “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.