• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ஆர்கேவுக்கு மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்

by Tamil2daynews
April 3, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ஆர்கேவுக்கு மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்

 

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்).
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே..
குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கூட இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்தது. அதிலும் ஹைலைட்டாக ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை உலகிலேயே முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.
உலகத்திலேயே தங்கள் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது கிளவுஸ் அணிந்துகொள்ளாமல் வெறும் கையால் ஹேர் டையைத் தொடமுடியுமா என்று கேட்டு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கண்டுபிடித்தார் ஆர்கே.

ஒரு தமிழனாக, இந்தியனாக இவர் கண்டுபிடித்த இந்த இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூக்கு இந்திய அரசாங்கம் 20 வருட அறிவுசார் காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.

அதேசமயம் தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது.

இதை மாற்றிக் காட்டும் விதமாக ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உலகத்தினர் அனைவருக்கும் அறைகூவல் விடுக்குமாறு 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் கிளவுஸ் அணியாமல் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கைகளால் அவர்கள் தலையில் தடவி பயன்படுத்தச் செய்து கின்னஸ் சாதனையையும் நிகழ்த்திக் காட்டி வெளிநாட்டவரின் அலட்சிய பேச்சுக்கு பதிலடி கொடுத்தார் ஆர்கே.

அதுமட்டுமல்ல மனிதனின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றான குறட்டைக்கு  தீர்வு கண்டுள்ளார் ஆர்கே. அது இந்திய அரசாங்கத்தால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அப்படி, தான் எடுத்துக்கொண்ட எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய போராட்டம் நடத்தி அதை சாதித்துக் காட்டுபவராக ஆர்கே இருக்கிறார்.

சினிமாவில் என்றால் சில மாதங்களுக்கு சில நூறு பேருக்கு தான் வேலை வாய்ப்பளிக்க முடியும்.. ஆனால் கடந்த 15 வருடங்களாக தனது நிறுவனம் மூலம் இந்தியாவெங்கிலும் சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் வேலை வாய்ப்பளித்து வருகிறார் ஆர்கே.
இப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்கராரரான ஆர்கேவுக்கு இவரது பன்முகத்திறமையை பாராட்டி உலக அளவில் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்து தங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன.
இங்கே இந்திய அரசும் தமிழக அரசும் எவ்வளவோ விருதுகளைக் கொடுத்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருதுகளை, ஆஸ்கார், ரோட்டர்டாம் விருதுகளைத் தான் பெரிதாக நினைக்கிறோம்.
காரணம் வெளிநாட்டுக்காரர்கள் நம் திறமையை அங்கீகரிப்பது என்பது எப்போதுமே நமக்கு பெரிய விஷயம் தான். அப்படி ஒரு பன்முகத் திறமையாளராக, ஒரு தொழில் வல்லுநராக, ஒரு சாதனையாளராக அடையாளம் கண்டு நடிகர் ஆர்.கேவுக்கு 18 நாடுகள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன.
நான்கு வருடங்களுக்கு முன்பு மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ விருது ஆர்.கேவுக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல ATJEH DARISSALUM மன்னர் கைகளாலும் டத்தோ ஸ்ரீ விருது பெற்றவர் தான் ஆர்கே.
இந்த நிலையில் தற்போது ATJEH DARISSALUM மன்னருக்கு அடுத்ததாக கருதப்படும் டான் ஸ்ரீ என்கிற உயரிய விருதையும் ATJEH DARISSALUM மன்னர் கையால் பெற்றுள்ளார் ஆர்.கே.
இது கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு வழங்கும் ‘சர்’ பட்டத்திற்கு நிகரானது. இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
 ஆர்கேவை மேலும் சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடம் பழமை வாய்ந்த, தனக்கு இன்னொரு மன்னரிடம் இருந்து பரிசாகக் கிடைத்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார் ATJEH DARISSALUM மன்னர்.
அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்த்துள்ளார் ஆர்கே..
இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு கௌரவம் பெற்ற முதல் நபர் என்றால் அது நம் நடிகர் ஆர்கே மட்டும் தான் .
ATJEH DARISSALUM  மன்னரிடம் இருந்து இப்படிப்பட்ட உயரிய விருது மற்றும் கௌரவம் கிடைத்தது குறித்து நடிகர் ஆர்.கே கூறும்போது,
“வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது வேறு.. அது மட்டுமே முக்கியமல்ல.. நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன் தரவேண்டும். நம் சாதனைகளுக்காக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் கையால் இப்படி விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதை ஒரு தமிழனுக்கான உயர்ந்த அங்கீகாரமாக  நான் நினைக்கிறேன்.
காரைக்குடியிலிருந்து வந்த ஒருவர்  மன்னர் கையால்,  பழம்பெருமை வாய்ந்த இரண்டு வாள்களை எனக்கு பரிசாகத் தரும் அளவிற்கு ஏதோ சாதித்துள்ளேன் என்பது ஒரு தமிழனாக என்னை பெருமை கொள்ள வைக்கிறது.
விஐபி ஹேர் கலர் ஷாம்பு என்கிற எனது கண்டுபிடிப்பை இப்போது வரை உலகத்தில் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
எவ்வளவோ பெரிய பெரிய நிறுவனங்கள் என்னுடைய இந்த அரிய கண்டுபிடிப்பை விலைக்கு வாங்கிக் கொள்வதாகச் சொல்லி முன்வந்து ஆயிரம் கோடிகளில் விலைபேசி இந்த தயாரிப்பின் வெற்றி சூட்சுமத்தையும் இதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் என்னென்ன என்பதையும் கண்டுபிடிக்க பல்வேறு வகையில் தந்திரமாக முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் இது ஒரு தமிழனின் கண்டுபிடிப்பாகவே கடைசி வரை அறியப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
 இதுபோன்ற விருதுகளும் அங்கீகாரமும் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் ஆர்கே.
ஆர்கேவின் இந்த விடாமுயற்சியை பார்க்கும்போது அவரது போராட்டத்தையும் தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அதற்கான அங்கீகாரமாக kingdom of Atjeh Darussalam  Majesty Dymm Tuanku muhammad டான் ஸ்ரீ பட்டம் வழங்கியதுடன் இரண்டு வாள்கள்  நினைவுப் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஒரு வாள் மன்னராலும் மற்றொரு வாள் இளவரசர் Tuanku Radian Ache கையாலும் வழங்கப்பட்டது. மிகக் கௌரவமான இந்நிகழ்வு  ஆர். கே  வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அவரது இந்த சாதனைகளையும் அவருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரங்களையும் பார்த்து ஒரு தமிழனாக பெருமைப்படுவோம்.. ஒரு இந்தியனாக வாழ்த்துவோம்..
கருமாரி மூவிஸ் சார்பாக ஆர். கண்ணன் இயக்கத்தில், KT பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில், இமான் இசையில் ஆர் கே நடிக்கும் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. விலங்குகள் முக்கிய பங்கேற்கும் இப்படம் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Previous Post

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

Next Post

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

Next Post

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விடுதலை – 2 விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.