ரவி மோகன் நடித்த ஹிட் படம் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ் .

எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது.
நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்,5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், மார்ச் 14ம் தேதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.