• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நாயகன் தர்ஷன் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

by Tamil2daynews
September 16, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நாயகன் தர்ஷன் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

 

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;

புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்

இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;

சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான ‘சரண்டர்’ படத்திற்காக நல்ல பாராட்டுகளைப் பெற்ற தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் மோகன் குரு செல்வா இயக்கத்தில் ரோம்-காம் படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை செப்டம்பர் 15ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.

மோகன் குரு செல்வா இயக்கத்தில் உருவாகும் “காட்ஸ்ஜில்லா” படமானது, ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விவரம்:

ஒளிப்பதிவு – சிவராஜ்
படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த்
இசை – கார்த்திக் ஹர்ஷா
கலை இயக்கம் – சௌரப் கேசவ்

தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு, “காட்ஸ்ஜில்லா” புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Previous Post

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

Next Post

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

Next Post

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்யா – அனுராக் காஷ்யப் – கிரீஷ் ஜகர்லமுடி – ராஜ் பி. ஷெட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் ‘மை லார்ட் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

September 16, 2025

இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழுவினர்!

September 16, 2025

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!

September 16, 2025

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

September 16, 2025

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நாயகன் தர்ஷன் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

September 16, 2025

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

September 16, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.