• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘டீன்ஸ்’ – விமர்சனம்

by Tamil2daynews
July 15, 2024
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டீன்ஸ்’ – விமர்சனம் 

 

எதிலுமே புதுமையை விரும்பும் புதுமைப்பித்தன் பார்த்திபன் இயக்கி நடித்து இருக்கும் படம் டீன்ஸ். முழுக்க முழுக்க பள்ளி குழந்தைகளை வைத்து பன்னாட்டை நோக்கி சிந்தித்து இருக்கும் கதை தான் டீன்ஸ்.

நாங்கள் இன்னும் சிறுவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் டின் ஏஜ் பருவத்தை அடைந்த சிறுவர், சிறுமியர் அடங்கிய 13 பேர் சாகசப் பயணம் ஒன்றுக்கு தயாராகின்றனர். அந்தக் குழுவில் உள்ள பெண்ணின் பாட்டி ஊரில் நிகழும் அமானுஷ்யமான விஷயங்களைப் பார்க்க செல்கின்றனர். பள்ளியை ‘கட்’ அடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் தப்பிச் செல்லும் அவர்கள், வழியில் போராட்டம் ஒன்றினால், காட்டுப் பாதைக்குள் நுழைகின்றனர். அந்தப் பயணத்தில் ஒவ்வொருவராக மாயமாகின்றனர். இதற்கு என்ன காரணம்? அவர்களை எஞ்சியிருந்த மற்றவர்கள் காப்பாற்றினார்களா? இதற்கு நடுவில் பார்த்திபனுக்கு என்ன வேலை? – இதுதான் ‘டீன்ஸ்’ படத்தின் திரைக்கதை.

படத்தின் தொடக்கத்தில் விடலைப் பருவ, சிறுவர், சிறுமியர்களின் நீண்ட உரையாடலும், சாகசப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சொல்லும் காரணங்களும் ஒட்டவில்லை. எலைட் தன்மையை பறைசாற்றும் தொடர் ஆங்கில வசனங்களும், அதையொட்டி நீளும் ஆங்கில பாடல்களும், மேலோட்டமான அவர்கள் வாழ்வியலும் பார்வையாளர்களை அந்நியப்படுத்துகிறது.

சிறுவர், சிறுமியர்களின் வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கைகளும் ஓவர் டோஸ். குறிப்பாக, குழந்தைத் தனம் நீங்காத அவர்களுக்குள் காதலையும், சிறிய ரொமான்ஸையும், காதல் பாடலையும் வைத்திருப்பது பெரும் நெருடல். மேலும், அவர்களை கள் குடிப்பவர்களாக காட்சிப்படுத்தியிருப்பது மோசமான சித்தரிப்பு. காட்சிக்கு காட்சி ஒருவர் காணாமல் போவது, அதையறிந்து சுற்றியிருப்பவர்கள் அலறுவது, கத்துவது, அழுவது, மீண்டும் நடப்பது இடையில் காதல் என ரீபீட் காட்சிகளால் தேங்கி நிற்கிறது திரைக்கதை. சீரியஸான காட்சியின்போது வரும் புரபோஸல் போன்றவை செயற்கை எமோனஷனல் திணிப்பு.

பார்த்திபன் கஷ்பட்டு படித்தார் என்பதற்காக கோல்டன் டிஸ்க், எலக்ட்ரோ மெக்னடிக் வேவ், என எல்லாவற்றையும் பாடமாக எடுப்பது அயற்சி. க்ளைமாக்ஸை ஒட்டி நகரும் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நடுவில் யோகிபாபுவை வேறு அழைத்துவந்து சிரிப்புக்காக சீரியஸ் முயற்சி எடுத்துள்ளனர். எந்த முயற்சியுமே பலனளிக்கவில்லை.

போலவே, உடல் பருமன் கொண்ட சிறுவன் எப்போதும் உணவில் கவனம் செலுத்துவது போன்ற ஸ்டீரியோடைப் காட்சிகள் பொறுப்பற்றதன்மை. ‘லெமன் மால போட்டு எமன் மாதிரி வர’, ‘well’ என்ற வார்த்தையை வைத்து செய்யும் ஜாலங்கள் பார்த்திபன் டச் வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் மிகப் பெரிய சிக்கல் ஒரு சிறுவனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் வித்தியாசப்படாமல் ஒரேமாதிரி இருப்பதால் ஒருவர் காணாமல் போவதோ, அவர்களின் அழுகுரலோ, பதற்றமோ எதுவும் நம் காதுகளுக்கு எட்டுவதில்லை.

எந்த கனெக்‌ஷனும் இல்லாததும், மறுபுறம் சிறுவர்களைத் தேடும் பெற்றோர்களின் போராட்டத்தை கடமைக்கு காட்சிப்படுத்தியிருப்பதும் சொதப்பல். ஆணவப் படுகொலை குறித்தும், சாதிய ஒடுக்குமுறையையும் தொட்டிருக்கிறார் இயக்குநர். கிராஃபிக்ஸ் காட்சிகள் சில இடங்களில் கச்சிதம் கூட்டுகின்றன.

சிறுவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், பல இடங்களில் வயதுக்கு மீறிய ஓவர் ஆக்டிங் துருத்திக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. பார்த்திபன் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கிறார். யோகிபாபு கதாபாத்திரம் வீணடிப்பு.

டி.இமான் இசையில் ‘யேசு’ என தொடங்கும் பாடலைத் தாண்டி மற்ற பாடல்களின் ஈர்ப்பில்லை. பின்னணி இசை காட்சிகளின் மீட்டரிலிருந்து கூடியோ, குறைந்தோ இருப்பதை உணர முடிகிறது. காவேமிக் ஆரியின் வித்தியாசமான கோணங்கள் கவனிக்க வைக்கின்றன. மொத்தத்தில், திரைக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பை ஏற்படுத்தவில்லை இந்த பரி’சோதனை’ முயற்சி.

இனி பார்த்திபன் அடுத்த படத்தை இயக்கும் முன் சற்று யோசித்து இயக்குவது நல்லது.
Previous Post

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்

Next Post

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!!

Next Post

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!!

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.