எவ்வித விளம்பரமே இல்லாமல் யாருமே எதிர்பார்க்காத 2022 புத்தாண்டு அன்று வெளியான படம் ஓணான்.
‘களவானி’புகழ் திருமுருகன் சதாசிவம் பரட்டைத் தலையும் வெறித்த கண்களுமாய் ஒரு குக்கிராமத்துக்கு வருகிறார். ஊர்க்கார வம்பர்கள் சிலரிடமிருந்து கதாநாயகி குடும்பத்தினரை காப்பாற்றிய வகையில் அவர்களின் வீட்டில் தஞ்சமடைந்து குண்டான் குண்டானாய் சோறு சாப்பிடுகிறார். இவரைக் கண்ட நாள் முதல் அக்குடும்ப உறுப்பினர்களுல் ஒருவரான காளிவெங்கட்டுக்குப் பிடிக்கவில்லை. இவர் அவரை விரட்ட முயல, அவர் இவரை மிரட்ட முயல அத்தனையையும் மீறி காளி வெங்கட்டின் தங்கை ஷில்பா மஞ்சுநாத்தை திருமணம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து ஆக்ரோசமடையும் காளிவெங்கட் திருமுருகனைக் கொலை செய்ய முயல, ஒரு ஃப்ளாஷ்பேக் மூலம், இதுவரை வில்லனாகச் சித்தரிக்கப்பட்ட திருமுருகன் நிஜத்தில் நல்லவர் என்பதும் நல்லவராகக் காட்சியளித்த காளி வெங்கட், திருமுருகனின் மனைவியைக் கற்பழித்த காலிப்பயல் என்பதும் தெரிய வருகிறது.உருண்டு திரண்ட, [அதாவது கண்கள்] ஷில்பா மஞ்சுநாத் தனது பேரழகால் சொக்கவைக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நாயகன் திருமுருகன், வில்லன் காளிவெங்கட் இருவரும் கூட நன்றாகவே நடித்திருக்கிறார்கள். காமெடி என்கிற பெயரில் சிங்கம்புலி கொலையாய்க் கொன்று பாதிப் படத்தைத் தின்று விடுகிறார்.இசை,ஒளிப்பதிவு என்று படத்தின் அத்தனை டெக்னிக்கல் சமாச்சாரங்களும் பார்ப்பவர்களை அநியாயத்துக்கு சோதிக்கின்றன. சென்னன் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். சென்னன் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். சென்னன் என்பவர் எழுதிஇயக்கியிருக்கிறார்.சென்னன் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். ‘ஒணான்’அப்டின்னா நமக்கு ஞாபகம் வருவது வேலியில போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுவிட்டு குத்துதே குடையுதே என்று கத்த கூடாது என்று சொல்லுவாங்க இது ஒரு பழமொழி.
அது இந்த படம் பார்க்கும்போது நிஜமாய் இருக்குது









