• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் ‘பஹிஷ்கரனா’ ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

by Tamil2daynews
July 7, 2024
in சினிமா செய்திகள்
0
பிரான்சிஸ் மார்கஸ் அவர்களின் மதிப்புமிக்க பேனரான மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் ‘Life In Loom’ ஆகும். ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் மார்க் ஸ்டுடியோஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது.
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் ‘பஹிஷ்கரனா’  ZEE5 இல் ஜூலை
19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! 

இந்தியா, ஜூலை XX, 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் அடுத்து வரவிருக்கும் ஒரிஜினல் தெலுங்குத் சீரிஸான ​​‘பஹிஷ்கரனா’ சீரிஸ் ஜூலை 19 அன்று ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முகேஷ் பிரஜாபதி இயக்கத்தில், Pixel Pictures Pvt Ltd சார்பில், பிரசாந்தி மாலிசெட்டி தயாரித்துள்ள இந்த சீரிஸில்  , அஞ்சலி, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். ‘பஹிஷ்கரனா’ என்பது ஒரு விபச்சாரியின் அழுத்தமான பயணத்தை  விவரிக்கும்  கதை.  இந்தக் கதை 1990களின் கிராமப்புற குண்டூரின் பின்னணியில் விரிகிறது. அங்கு விபச்சாரியாக வாழும் நாயகி, அவளின் உண்மையான வரலாறு, அவளுக்கு நிகழும் சம்பவங்கள் என இக்கதை அழுத்தமான உணர்வுகளின் பின்னணியில் மறக்க முடியாத அனுபவம் தரும் தொடராக உருவாகியுள்ளது இந்த சீரிஸ்.

1990களில் பெத்தபள்ளி, கிராமத்தில் வசிக்கும் எளிமையான பெண்ணான தர்ஷி , வேலையிலிருந்து திரும்பவில்லை எனும் போது, சாதாரணமாகத் தோன்றும் ஒரு நாள் இருண்டதாக மாறுகிறது. இந்த நிகழ்வு விபச்சாரி புஷ்பா, மற்றும் தர்ஷியின் மனைவி லக்ஷ்மி என இரு பெண்களின் வாழ்வில் இடியாக இறங்குகிறது. இவர்களுக்கு இடையிலான  உறவுகளை வெளிப்படுத்தும்படி அடுத்தடுத்து உடையும் ரகசியங்கள் திடுக்கிட வைக்கின்றன.  காதல், துரோகம் மற்றும் விதியின் அதிர்ச்சியூட்டும் திருப்பங்களின் வழியே இந்தக்கதை பயணிக்கிறது. கிராமத்தின் சர்பஞ்ச், சிவயா, இந்த சிக்கலான நாடகத்தில் முக்கிய நபராக மாறுகிறார், அவரது நடவடிக்கைகள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போடும்படி  அமைக்கிறது. புஷ்பாவும் லக்ஷ்மியும் வாழ்வில் மிக மோசமானதைச் சகித்துக்கொண்டதாக நினைக்கும் போது, அவர்கள் மிகவும் திகைப்பூட்டும் மேலும் ஒரு உண்மையை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கேள்வி கேட்கும்படி அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் பெண்களின் தேர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட உலகில், சமூக விதிமுறைகளை மீறி, தங்கள் சொந்த விதிகளை உருவாக்குவதற்கான வலிமையை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? மேலும் அறிய ‘பஹிஷ்கரணா’வைப் பாருங்கள்!

Pixel Pictures Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி மாலிசெட்டி குறிப்பிடுகையில், “பஹிஷ்கரனாவில் Zee நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது ஒரு அற்புதமான பயணமாகும், உலகளாவிய ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு படைப்பை நம் மண் தொடர்பான பின்னணியில், கிராமத்தில் வேரூன்றிய கதையைச் சொல்ல முழு சுதந்திரம் அளித்தது.  பஹிஷ்கரனாவில் அஞ்சலியின் நடிப்பு, இதுவரை நீங்கள் பார்த்திராதது.  மேலும்  இந்த சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களும் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார்கள்.  இந்த படைப்பில்  பணிபுரிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் இயக்குநர் முகேஷ் பிரஜாபதி ஒரு உணர்ச்சிமிக்க கதைசொல்லி, அவர் இந்த கதையை மிக மிக நுணுக்கத்துடனும் ஆழத்துடனும் வடிவமைத்துள்ளார். Pixel Pictures இல், ‘உள்ளடக்கம் ராஜா, ஆனால் சூழலே கடவுள்’ என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் ‘பஹிஷ்கரனா’ மூலம், நம் சமூகத்தின் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் கதையை உருவாக்க முயற்சித்தோம். ZEE5 போன்ற தேசிய அளவில் பிரபலமான தளத்தின் மூலம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வாழும் அனைத்து வகை பார்வையாளர்களையும் இந்த சீரிஸ் சென்றடையும் என நம்புகிறோம்.  கதைசொல்லலின் எல்லைகளை மீறி புதிய அனுபவங்களைத் தரும் படைப்புகளை உருவாக்கும் எங்கள் எண்ணத்திற்கு, இதுபோன்ற மேலும் பல ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

இயக்குநர் முகேஷ் பிரஜாபதி கூறுகையில்.., “பஹிஷ்கரனா” ஒரு சக்திவாய்ந்த கதை மற்றும் சிக்கலான கதாபாத்திரங்களுடன் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை. கதாநாயகி, புஷ்பா, இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் மற்றும் வாழ்க்கை நியாயமற்றதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டவர், ஆனால் கடல் போல அமைதியாகவும், ஆங்காரமாகவும்  முரண்படும்போது புயல் வீசும் என்பது உறுதி! புஷ்பாவிற்கு பல அடுக்குகள் உள்ளன, மேலும் அவரது கதை சவால்களை எதிர்கொண்டாலும் கூட, அதைக்கடந்து வரும் திறன் கொண்டவர்.  நடிகை அஞ்சலி தன் தனித்துவமான திறமையால் புஷ்பாவை தன் நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார், . ZEE5 மற்றும் Pixel Pictures உடன் இணைந்து இந்த நுணுக்கமான கதைசொல்லலைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த சிக்கலான கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பதில் எங்கள் திறமையான நடிகர்களின் அர்ப்பணிப்புக்காக நான் இந்நேரத்தில்  நன்றி கூறிக்கொள்கிறேன். “பஹிஷ்கரனா” இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கும்  என்று நம்புகிறோம்.

முன்னணி நடிகையான அஞ்சலி, தனது கதாபாத்திரம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதாவது.., “பஹிஷ்கரனாவில் புஷ்பாவாக நடித்தது எனக்கு மிக நிறைவான அனுபவமாக இருந்தது. ஒரு அப்பாவி வேசியாக இருந்து அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக வலிமையையும் தைரியத்தையும் கொண்டு போராடும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தின் பயணம் சவாலானது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருந்தது. புஷ்பா மர்மம் நிறைந்த ஒரு பெண், மற்றும் அவரது கதை ஒரு தவற்றைச் சரிசெய்ய எடுக்கும் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் ஒரு சான்றாகும். ZEE5 பார்வையாளர்கள் அவளது மாற்றத்தைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவரது கதை என்னைப் போலவே அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”

ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.
Previous Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Next Post

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!

Next Post
பிரான்சிஸ் மார்கஸ் அவர்களின் மதிப்புமிக்க பேனரான மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் ‘Life In Loom’ ஆகும். ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் மார்க் ஸ்டுடியோஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது.

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய தலைவர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.