• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி.

by Tamil2daynews
February 21, 2020
in சினிமா செய்திகள்
0
சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி.
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.
கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள  கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது. மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில்  தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும்(fonts), சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.
உலக மொழிகளின் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடத்தில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்கக் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் கற்க 52 குறியீடுகளை ஒருவர் அறிய வேண்டும். கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும்.  கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை(clicks) எப்படி உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது.
கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம்.
Previous Post

Poster Launch of Movie “Rooster”

Next Post

புதிய தீர்மானங்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

Next Post
புதிய தீர்மானங்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

புதிய தீர்மானங்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.