*ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை*ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜையில் ஈடுபட்டுள்ளார்.


இன்று (01-09-2020) காலை 10:40 மணிக்கு குடும்பத்தோடு வருகை தந்த விஜயகாந்த் பிரேமலதா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புரோகிதர் ஒருவரின் வீட்டில் ராகு கேது நிவர்த்தி பூஜை செய்து வருகின்றனர்.
கொரோனா காலம் என்பதால் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் சந்திப்பு திட்டம் இல்லை என தகவல் வெளியான நிலையில் ராமேஸ்வரத்திற்கு விஜயகாந்த் வருகையால் தேமுதிக தொண்டர்கள் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.









