• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ள ஜீ5

by Tamil2daynews
September 5, 2020
in சினிமா செய்திகள்
0
நாட்டில் ஏற்பட்டு உள்ள உணவு நெருக்கடி : மறக்க செய்ய லடாக் பகுதியை ஆக்கிரமிக்க முயலும் சீனா..!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜீ 5 க்ளப்பின் சந்தாதாரர்கள் அனைவராலும், அவர்களின் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே கண்டு ரசிக்க முடியும். 

இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, வலிமையிலும், அந்தஸ்திலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு அதிலிருக்கும் தரமான படைப்புகளே காரணம். தற்போது ஜீ5 தளத்தின் அடுத்த படி, அதன் சந்தாதாரர்களை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும்.

பிரபலமான இந்த ஓடிடி தளம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் புகழை வைத்து, தமிழ் சந்தையில் தனது இருப்பை இன்னும் பலப்படுத்தவுள்ளது. தற்போது ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பகுதிகளை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னரே கண்டு களிக்கும் அற்புதமான, செலவு குறைந்த வசதியை ஜீ 5 க்ளப் அதன் சந்தாதாரரகளுக்குத் தருகிறது.

இந்தச் சலுகையின் பல அம்சங்கள், இதைத் தனித்துவமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆக்குகிறது.

 

ஜீ5 க்ளப்புக்கான ஒரு வருட சந்தா தொகை வெறும் ரூ.365 மட்டுமே. இந்த மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள், தங்களுக்குப் பிடித்த ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் ப்ரீமியர் பகுதிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே பார்த்து மகிழலாம். அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்த்து முடித்துவிடலாம்.

ரசிகர்களைக் கண்டிப்பாக உற்சாகப்படுத்தும் இந்த அறிவிப்பு ஏற்கனவே இன்னும் சில சின்னத்திரை நட்சத்திரங்களையும் ஆச்சரியப்படுத்தி இது பற்றி பேச வைத்துள்ளது.

சமீபத்தில் ரசிகர்களுடன் ஸூம் மூலமாக நேரலையில் கலந்துரையாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமா மற்றும் நக்‌ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யாவில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் பேசுகையில், “ஒரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் முன்னரே அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 க்ளப்பை பலர் தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன்” என்றார்.

விஷ்ணு விஜய்யுடன் நடிக்கும் ஆயிஷாவும் இதை ஆமோதிக்கிறார். “ஜீ 5ன் இந்த முடிவு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். சந்தாதாரர்கள், அவர்களுக்குப் பிடித்தமான தொடர்களின் கதையோட்டம் குறித்து, தொலைக்காட்சியில் வருவதற்கு ஒரு நாள் முன்னரே தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் ஆயிஷா.

இன்னொரு பிரபல தொடரான யாரடி நீ மோகினியில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஸ்ரீகுமாரும், நக்‌ஷத்ராவும் கூட, இதே உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

“ஜீ5-ன் அற்புதமான முடிவு இது. இந்த சந்தாவுக்கான கட்டணம் தான் என்னை அதிகம் ஈர்த்துள்ளது. ஒரு வருட சந்தா வெறும் ரூ.365 மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபாய் என்கிற கணக்கு. அதன் மூலம் அத்தனை தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு நாள் முன்னரே பார்க்க முடியும்” என்கிறார் ஸ்ரீகுமார்.

இந்த புதிய அறிமுகத்தை வரவேற்பதாகக் கூறும் நக்‌ஷத்ரா, “ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை ஒரு நாள் முன்னரே பார்க்கும் வாய்ப்பைத் தரும் இந்த ஜீ5 க்ளப் மிகவும் புதுமையான முடிவு. கண்டிப்பாக இதைப் பலர் வரவேற்பார்கள்” என்கிறார்.

வெறும் ரூ. 365/- செலுத்தி ஜீ5 க்ளப்பில் இணைந்திருங்கள். உங்கள் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, ப்ரீமியர் பகுதிகளை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே கண்டு களியுங்கள்.

Previous Post

நானி மற்றும் சுதீர் பாபு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘வி’,

Next Post

நடிகர் பிளாக் பாண்டி எழுதி இசையமைத்த  கொரோனா விழிப்புணர்வு பாடல்! 

Next Post
நடிகர் பிளாக் பாண்டி எழுதி இசையமைத்த  கொரோனா விழிப்புணர்வு பாடல்! 

நடிகர் பிளாக் பாண்டி எழுதி இசையமைத்த  கொரோனா விழிப்புணர்வு பாடல்! 

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.