சொகுசு வாகனங்களையும் வைத்துக் கொண்டு கொழும்பு மாநகரில் பிச்சையெடுத்த கோடீஸ்வரர்..!! அதிர்ச்சியில் உறைந்து போன போலீசார்..!!
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது, தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிச்சைகாரரின் சொகுசு மாடி வீட்டின் தோட்டத்தில் ஒரு வோகன் ஆர் கார் மற்றும் ஒரு சொகுசு காரையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் மாத வருமானம் ரூபா 30,000 ஆயிரம் மற்றும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானம் ரூபா 5,000 கிடைத்துள்ளது.
கொழும்பு – கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ரூபா 20,000 மதிப்புள்ள பழங்களை ஏற்றிய தள்ளு வண்டியை திருடியதாக புகார் வந்ததையடுத்து, சி.சி.டி.வி கேமரா வீடியோவை பார்த்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை (23-08-2020)அன்று அந்த நபரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துசி.சி.டி.வி கேமரா வீடியோவில் வண்டியைத் தள்ளுவதும், பின்னர் தேவாலயத்தின் அருகே பிச்சை எடுப்பதில் வழக்கமாக ஈடுபட்டுவதும் பதிவாகியுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
வண்டியை தனது வீட்டிற்கு கொண்டு வர ஒரு நபருக்கு ரூ 5,000 கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கடலோர போலீஸ் குற்றப்புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜயந்த குமாரா தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது. 












