• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே

by Tamil2daynews
September 29, 2020
in சினிமா செய்திகள்
0
மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே-வை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.


தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் காதல் கதையைப் பற்றின ஒரு சிறிய கண்ணோட்டத்தை இந்த பாடல் கொடுக்கிறது.
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.
வரவிருக்கும் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் நிஷப்தம் திரைப்படத்தில், சாக்ஷி மற்றும் அந்தோனியின் காதல் கதையைப் பற்றின ஒரு முன்னோட்டத்தை நமக்கு தரும் விதமாக அமேசான் ப்ரைம் வீடியோ இன்று நின்னே நின்னே என்ற காதல் பாடலை வெளியிட்டிருக்கிறது. அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவன் ஜோடிக்கு இடையில் மலரும் இனிமையான காதல் மற்றும் அவர்களுக்கு இடையிலான ஹெமிஸ்டிரியையும் இப்பாடல் வெளிப்படுத்துகிறது. இப்பாடல் நம் மனதிற்கு இதமான உணர்வை தரக்கூடியதாகவும், நம் முகங்களில் புன்னகையை வரவழைக்க கூடியதாகவும் இருக்கும். மனதை உருக்கும் இந்தப் பாடலுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க, தெலுங்கில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார், பாடல் வரிகளை பாஸ்கரபட்லா எழுதியுள்ளார். தெலுங்கு பதிப்போடு, அக்டோபர் 2 ஆம் தேதி சைலன்ஸ் என்ற பெயரில் தமிழ் மற்றும் மலையாளத்திலும் படம் வெளியிடப்படும். நீயே நீயே என்ற மெலடி பாடலை ஆலப் ராஜு (தமிழ்) மற்றும் மது பாலகிருஷ்ணன் (மலையாளம்) ஆகியோர் பாடியுள்ளனர். பாடலின் தமிழ் பாடல் வரிகளை கருணாகரன் எழுதியுள்ளார், மலையாள பாடல் வரிகளை பி. கே. ஹரி நாராயணன் எழுதியுள்ளார்.

 


பாடல் குறித்து இசையமைப்பாளர் கோபி சுந்தர் கருத்து தெரிவிக்கையில், “ த்ரில்லர் படத்தில் காதல் பாடல் இருப்பது கதையின் போக்கிற்கு இடைஞ்சலாக இருக்குமோ என நினைக்க வைக்கும், ஆனால் அதேநேரம், நின் நின்னே பாடலுக்கு கதையில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. படத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சாக்ஷி மற்றும் அந்தோணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான இந்த காதல், பாடலில் மிக அழகாக வெளிவந்திருக்கிறது. பாடகர்களும் பாடலாசிரியர்களும் மனதை வருடும் இந்த பாடலுக்காக அற்புதமாக வேலை செய்துள்ளனர். இந்தப் பாடலை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என நம்புகிறேன் என்றார்.”
டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிஷப்தம் திரைப்படத்தை இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அக்டோபர் 2, 2020 முதல்  அமேசான் ப்ரைம் பிரத்தியேகமாக ஸ்டிரீம் செய்கிறது. இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

டிரெய்லரை இங்கே பாருங்கள்:

கதைச் சுருக்கம்:

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர். கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் நிஷப்தமும் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவற்றுடன் இந்திய படங்களான வி, குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் நிஷப்தம் திரைப்படத்தை எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-ல் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.

Previous Post

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் !  

Next Post

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

Next Post
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

Popular News

  • பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.