• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின்   முதல்  தமிழ் திரைப்படம் !

by Tamil2daynews
October 2, 2020
in Uncategorized
0
“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின்   முதல்  தமிழ் திரைப்படம் !
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

 

தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு  இயக்குநர்களான  கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன்  ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக  வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள்.

 

மும்பை 2020 அக்டோபர் 1

நெட்ஃப்ளிக்ஸ்  ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான  “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறுவித்துள்ளார்கள். கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன்  ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாவ கதைகள்  காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை  ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம்  தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

 

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்

 

 

படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் கூறியது…

“பாவ கதைகள்” படம் இயக்குநர்கள் வெற்றி மாறன்,   சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன்  ஆகியோருடன் பணிபுரியும் எனது முதல் அனுபவம். கனமிக்க, மிகவும் சிக்கலான  கருவை, மிகவும் நேர்மையுடன் வெளிப்படையாக இந்த பெரும் இயக்குநர்களுடன் இணைந்து கையாண்டு கதை சொன்ன இந்த அனுபவம் வெகு அற்புதமாக இருந்தது. இந்த ஆந்தலாஜி திரைப்படம் நாம் கொண்டிருக்கும் அந்தஸ்து, கௌரவம், சமூக கட்டமைப்புகள் தனிமனித சுதந்திரத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கட்டுடைத்து காட்டுவதாக இருக்கும் என்றார்.

படம் குறித்து சுதா கொங்குரா கூறியது…

இப்படத்தில் உள்ள ஒவ்வோரு கதைகளும் எந்த தடைகளும் இல்லாமல் நம் சினிமா வழக்கத்திற்கு மாறான கட்டுக்கடங்காத அன்பை கூறும் கதைகளாகும். மிக உயர்ந்த தரத்திலான இந்த படைப்பு இந்தியாவையும் கடந்து உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வழியே சென்றடைவது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

படம் குறித்து வெற்றி மாறன்  கூறியது…

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கதை சொல்வதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. நான் நினைத்ததை எந்த தடங்கலும் இல்லாமல் சொல்ல முடிந்தது.

படம் உருவாக்குவதில் “பாவ கதைகள்” திரைப்படத்தில் முழு சுதந்திரத்தை அனுபவைத்தேன். இப்படம் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

படம் குறித்து விக்னேஷ் சிவன்   கூறியது…

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன படைப்புகளின் தீவிர ரசிகன் நான். ஒரு படைப்பாளனாக மாறுபட்ட கதையினை, முழுதாக அங்கீகரிக்கும் மூன்று பெரும் இயக்குநருடன் இணைந்து கூறும் வாய்ப்பு மிகப்பெரிய பரிசாகும். இக்கதைகள்

 

 

 

நம் தமிழ் சமூகத்தில் உறவுகளின் வேதனையளிக்கும் இருண்மை மிக்க  பக்கத்தினை நாம் உணரும்படி வெளிச்சமிட்டு காட்டும் என்றார்.

 

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரரகள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரரகள் படததை  நிறுத்தி, ஃபார்வெட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

 

RSVP Movies

RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்  என்பது நாம் இங்கு சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர்கள் இணையவெளியில் தாங்கள்  பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த  வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக,  வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிகொண்டே இருக்கவேண்டும் என்பதாகும்.

இந்நோக்கத்தில் செயல்படும் RSVP Movies நிறுவனம் Love  Per Square Foot, Lust Stories, Karwaan, Pihu, Kedarnath, URI – The Surgical Strike, Sonchiriya , Raat akeli hain , the sky is pink and Mard Ko Dard Nahi Hota போன்ற முக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலு அவர்களது தயாரிப்பில்  Rashmi Rocket , Tejas , Pippa and Sam Maneckshaw போன்ற படைப்புகள் வெளிவர தயாராகவுள்ளது.

 

 

 

 

Flying Unicorn Entertainment  நிறுவனம்

ஆஷி துவா சாரா தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய சுதந்திரமாக இயங்கும் நிறுவனம் தான் Flying Unicorn Entertainment ஆகும். ஆஷி துவா சாரா தான் இந்தியாவில் முதன் முதலில் ஆந்தாலஜி படைப்பை, பாலிவுட்டின் முக்கிய ஆளுமைகளான ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப், மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில்  பாம்பே டாக்கீஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றை உருவாக்கினார்.  மேலும் இவர் சஃய்ப் அலிகான் நடிப்பில் உருவான ப்ளாக் காமெடி படமான காலக்காண்டி படத்தை தயாரித்துள்ளார்.

Previous Post

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். “மன்மதன்” படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. 

Next Post

Putham Pudhu Kaalai Announcement Press Release

Next Post
Putham Pudhu Kaalai Announcement Press Release

Putham Pudhu Kaalai Announcement Press Release

Popular News

  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.