• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

 எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

 உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான்  கோரிக்கை வைக்கிறேன்

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல்  படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு :  800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை  உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள்  தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி

 தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக  தன்னையே உயிராயுதமாக

உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை ,  உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா

Previous Post

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு!

Next Post

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

Next Post
வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் 'எறிடா'

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.