• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தரமான வாக்குறுதிகளோடு களமிரங்கும் இராமசாமி முரளி..!

by Tamil2daynews
November 12, 2020
in சினிமா செய்திகள்
0
தரமான வாக்குறுதிகளோடு களமிரங்கும் இராமசாமி முரளி..!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

1.சங்கம்பலப்படுத்தப்படும்  நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் ராமசாமிமுரளிசிறப்பு
பேட்டி
2. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம்- ராமசாமி முரளி பேட்டி
3. தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும் நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது
இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி@முரளியுடன்தேர்தல்களநிலவரம்பற்றி  ஒரு பேட்டி.
1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?
தமிழ்த்திரையுலகில் இப்போதைய
முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைசெய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றிபெற்றால் செய்வோம்
நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த்திரையுலகம்சந்திக்கும்சிக்கல்களைசரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வதே எங்களது முக்கிய பணியாக இருக்கும்
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, தொகையை அதிகரித்து மீண்டும் செயல்படுத்துவோம்.
சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது.சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
2.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதி இருப்பு எதுவும் இல்லை என்கிற நிலையில் ஓய்வூதியம், அன்பு தொகை எப்படி சாத்தியம்
எல்லோரும் இதைத்தான் கேட்கின்றனர் சாத்தியம் இல்லை என்பதை சாத்தியம் ஆக்கி காட்டும் செயல்திறன் எங்கள் அணிக்கு உள்ளது தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து நிதி ஆதாரத்தை உயர்த்துவோம்
3.தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?
திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.
4.  சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?
விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச்  சொன்னார். ஆனால் அவரால் இரண்டு சங்கங்களின் பொறுப்புகளை வைத்துக் கொண்டு இரண்டிலும் முழுமையாக செயல்படமுடியவில்லை.
5.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும்தேர்தல்களில்பேசப்பட்டுக்
கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?
ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.சிறு படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வந்த என் தந்தை இராமநாராயணனுக்கும், அவரிடம் சினிமா தொழில் கற்ற எனக்கும்அதன் வலி முழுமையாகத் தெரியும் அதனால் இந்த முறைஉறுதியானமுடிவுஎடுத்து
செயல்படுத்துவோம்
6.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?
டி.ராஜேந்தர் போடியிடுவது ஏற்க்கத்தக்கது இல்லைஏற்கெனவே விஷால் தலைவரான போது அவரே இந்த காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார்.இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். இப்படிப் பல சிக்கல்களை வைத்துக் கொண்டு அவர் போட்டியிடுவது வருந்தத் தக்கது.
7.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?
எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.
8. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாகஅமைந்திருக்கிறதே?
அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைத்து ஒன்றுபட்டு செயல்படுவோம்
9.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரவர் சக்திக்குட்பட்டு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் எந்தப்பணமோ, பொருளோ கொடுக்கப்படவில்லை
10.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?
மறைந்த என் தந்தை இராமநாராயணன் எளிமையானவர்எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகியவர் அவர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பில் இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது ஓய்வூதியம், அன்புத்தொகை என்பது
சிறுபட தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்காக சிறப்பு கவனம் செலுத்தினார்
யாருக்கு சிக்கல் என்றாலும் அவராலானஉதவிகளை செய்திருக்கிறார்அதனால் எல்லோரும் அவர் மீது பாசமாக இருந்தார்கள், அது இப்போது எனக்கு ஆதரவாக மாறியிருக்கிறதுஇதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.
11.பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பயன்பாட்டுக்காக 10,000 ம் ச.அடி உங்கள் தந்தை தலைவராக இருந்தபோது வழங்குவதாக சேம்பர் நிர்வாகத்தால் உறுதியளிக்கப்பட்டது அது பற்றி என்ற போது
பிலிம்சேம்பர் கட்டிடம் கட்டுவதற்கு எனது தந்தை இராமநாராயணன் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நிர்வாக ரீதியாகபல்வேறு உதவிகளை செய்துள்ளார். கட்டிட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது எங்களது அணி வெற்றிபெற்று பதவி ஏற்றவுடன் முதன்மை பணியாக பிலிம்சேம்பர் நிர்வாகத்துடன் பேசி சங்க பயன்பாட்டுக்காக 10,000ம் ச.அடி இடத்தை பெறுவோம்
சங்க அலுவலக பயன்பாட்டுக்கு போக எஞ்சியுள்ள இடத்தை சினிமா துறைசார்ந்து வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் அதன் மூலம் சங்கத்துக்கு மாதந்தோறும் நிரந்தர வருவாய் கிடைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என்றார்
Previous Post

உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.

Next Post

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்” !

Next Post
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் “விக்டிம்” !

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ( Axess Film Factory ) , ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் ( Black Ticket Company)  இணைந்து வழங்கும் ஆந்தாலஜி திரைப்படம் "விக்டிம்" !

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • FARISHTON – First song by Khatija Rahman (daughter of AR Rahman) Music composed by AR Rahman

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.