• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தைத்திருநாளில் வீரமங்கை வேலுநாச்சியார் ..!

by Tamil2daynews
December 30, 2020
in சினிமா செய்திகள்
0
தைத்திருநாளில் வீரமங்கை வேலுநாச்சியார் ..!
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ – தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்
18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி கொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாகிறது.
’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத் திருநாளில் தொடங்குகிறது.
இது குறித்து படக்குழு தரப்பில், “சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-வது நினைவுநாள் டிச.25 அன்று கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ திரைப்படத்திற்கான அலுவலகத்துக்கு பூஜை போடப்பட்டது.
வீரமங்கை வேலுநாச்சியாரின் கதையை திரைப்படமாக எடுக்க சட்டரீதியாக தக்க உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியாராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணிமாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ’சூரியவம்சம்’ ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு, தனது கேமராவால் ஜாலங்கள் செய்யும் தொழில்நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா எடிட்டிங், டி.பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வை செய்யவிருக்கின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார். இவர்களுடன், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணையவிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

Actor & Choreographer Gokulnath about his 4 GUINESS record

Next Post

எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் !

Next Post
எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் !

எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் !

Popular News

  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.