• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மக்கள் செல்வன்* தயாரித்துள்ள முகிழ்..!

by Tamil2daynews
January 5, 2021
in சினிமா செய்திகள்
0
*மக்கள் செல்வன்* தயாரித்துள்ள முகிழ்..!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம்*
எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன்  விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு  ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும்,  12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர்  குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது,
“ரொம்ப லைவ்-ஆன படம் இது. விஜய்சேதுபதி டிரைலரைப்  பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார். மேலும் “ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு” என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும். ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால்  மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். படத்தின் கதை, ஒரு பெற்றோர் ஒரு  குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்.. அந்தக்குழந்தையாலும் அந்தக்குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது” என்றார்.
இப்படத்தின் இசை அமைப்பாளராக ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார்.  மேலும் இப்படத்தின்  டிரைலரில் வரும் பாடல் அனைவராலும் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை கேட்டாலே பலமுறை மனதில் ஓடும்படி  ரேவா மிக கேட்சியான ட்யூனை அமைத்துள்ளார், இதுபோல மேலும் இரண்டு பாடல்கள் இருக்கிறது.
 ஒளிப்பதிவாளராக சத்யா பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் கழுகு படத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார், தற்போது பாலிவுட்டிலும் ஒரு படம் செய்திருக்கிறார். முகிழில் கதைக்கு ஏற்ற கேமராக்கோணங்களை அமைத்துள்ளார்.
96 படத்தின் எடிட்டிங்  மூலம் மக்களின் மனதில் பதிந்து எடிட்டர் கோவிந்தராஜ் இப்படத்தில்  எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது
Previous Post

நடிகர் ‘சாம்ஸ்’ மகன் ரெடி..!

Next Post

*கேரளா மழையில் படமாக்கப்பட்ட படம்* 

Next Post
*கேரளா மழையில் படமாக்கப்பட்ட படம்* 

*கேரளா மழையில் படமாக்கப்பட்ட படம்* 

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.