• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“Production No 12 “ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இனிதே  நிறைவு பெற்றது!

by Tamil2daynews
September 26, 2021
in சினிமா செய்திகள்
0
“Production No 12 “ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இனிதே  நிறைவு பெற்றது!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Axess Film Factory நிறுவனத்தின்  தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு  Production No 12 என தலைப்பிடப்பட்டு,  நடிகர்கள் பரத், வாணி போஜன்  முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

 

Axess Film Factory  நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது…

எங்கள் நிறுவனத்தின் “Production No 12”  படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது. மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்ச்சிகரமானதாக இருந்தது.  பரத் , வாணி போஜன், இயக்குநர் K.S.ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள். இயக்குநர்  M.சக்திவேல் அவர்கள் இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்குநராக விரைவில் மாறுவார். இயக்குநராக அவரது திறமையை தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு,  இப்படத்தை  திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது என்றார்.

மேலும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அதைத்தொடர்ந்து டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, K.S.ரவிக்குமார், ராஜ்குமார், காவ்யா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் அவர்களின் உதவியாளர் S. சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். R.கலை வாணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். SB மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார். இத்திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் M.சக்திவேல் கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபர திரில்லர் வகைப்படமாக இப்படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

“சிவகுமாரின் சபதம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியீடு !

Next Post
சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள  “ராஜ வம்சம் ” அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில்  வெளியீடு !

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள "ராஜ வம்சம் " அக்டோபர் 14 ஆம் தேதி - ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியீடு !

Popular News

  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.