• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

by Tamil2daynews
October 2, 2021
in சினிமா செய்திகள்
0
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் ‘அனுக்கிரகன்’
திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படமாக  ‘அனுக்கிரகன்’ உருவாகியுள்ளது.
இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .அவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார்.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கிக் கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை  கற்றவர் இவர்.
‘அனுக்கிரகன் ‘  படத்தில் கதாநாயகன், நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள்.
கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் வழியே புகழ்பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘நாடோடிகள்’ படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர்.  நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர்.  இன்னொரு முகம் தீபா.தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர்.
 ‘ரெக்க’ படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா :பாடலில் வருபவரும் ‘மாரி ‘படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார் .மேலும் பல அனுபவமுள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .
இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் வினோத் காந்தி.
இசையமைத்துள்ளவர் ரெஹான்.  படத்தில் ஆறு பாடல்கள் மூன்று பிரதான பாடல்களும் மூன்று தீம் சொல்லும் பாடல்களும் உண்டு. எடிட்டிங் SK. சதீஷ் குமார் .நடனம்
ரமேஷ்கமல்.
நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத்  திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது.
விரைவில் திரைகளில் உணர்வுகளைத் தொட வருகிறான் ‘அனுக்கிரகன்’.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
விரைவில் படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
Previous Post

*‘கலர்’ஃபுல்லாக மாறிய சந்தானத்தின் ‘சபாபதி’*

Next Post

“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post
“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !

“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.