• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை

by Tamil2daynews
October 19, 2021
in சினிமா செய்திகள்
0
சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில், “இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது.
கடவுளுக்கு நன்றி

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Previous Post

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

Next Post

தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !

Next Post
தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !

தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.