• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !

by Tamil2daynews
October 19, 2021
in சினிமா செய்திகள்
0
தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில்  சமந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக  தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த  வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார். இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடபடாத இரண்டு புதிய படங்களில்  ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.

 

 

 

 

 

 

 

சமந்தா நடிக்கும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக  தசரா பண்டிகை நன்னாளில் வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
சார்பில் பிரகாஷ் பாபு, பிரபு தயாரிப்பில்,
அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம் வித்தியாசமான திரைக் கதையாக உருவாகிறது.
மற்றொரு படம் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தை தயாரித்தவர்.

தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் அவருடைய படத்தை பற்றி கூறுகையில்,

“ சமந்தாவை இந்த படத்தில் ஒரு புது அவதாரத்தில் காண  நாங்கள் மிகுந்த ஆவலாக உள்ளோம். இந்த படத்தை பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது, ஆனால் இந்த படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக கூற முடியும். இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன்  இந்த கதையை என்னிடம் கூறியபோது, நான் மிகுந்த  ஆச்சர்யத்திற்கு உள்ளானேன். அவர்கள் கதை சொன்ன விதமும், அதை உருவாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது. இருவரும் இணைந்து இந்த கதையை எழுதியுள்ள போது, அவர்கள் இருவரும் இணைந்து, இதை திரையில் அழகாக கொண்டு வரவும் முடியும் என நான் நம்புகிறேன். அதே போல் இரு இயக்குனர்களுக்கும், அவர்களுடைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது என்றார்.

சமந்தாவை நயாகியாக இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற யோசனை யாருடையது என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத்  கூறியதாவது……..

இது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. சமந்தாவை இந்த திரைப்படத்திற்கு அழைத்து வருவது, படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும்  என நான் நம்பினேன். இயக்குநர்களும் அதை தான் நினைத்தார்கள். கதை தயாரான உடன் நாங்கள் சமந்தாவிடம் கூறினோம். அவரும் கதை பிடித்து உடனே ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படபிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Previous Post

சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை

Next Post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.

Next Post
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ். பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்

    4 shares
    Share 4 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.