• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட,  “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் !

by Tamil2daynews
October 21, 2021
in சினிமா செய்திகள்
0
காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட,  “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் !
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காக்கும் காக்கிக்கு வீரவணக்கம், காக்கிற காக்கிக்கு வீர்வணக்கம் !
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மறறும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் இன்று 21.102021 வெளியாகியுள்ளது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
“வீரவணக்கம்” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்ரோருவர் கொரோனாவில் மருத்துவமனைக்கு சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் காவல்துறை பணியில் இருந்த போதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அவர்களை பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் Dr. வருண் குமார்  IPS, வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா ? என எனைக்கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று உடனே ஒப்புக்க்கொண்டேன். இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம்.  பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர்.  சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி Dr. வருண் குமார்  IPS அவர்களின் ஈடுபாடு தான்,  இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம் அவருக்கு நன்றி. இன்று இப்பாடல் வெளியாகிறது. பாடலை கேட்டு மகிழுங்கள், நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா வெஸ்லி இணைந்து எழுத, சசிகலா அவர்களும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை, இன்று 21.10.2021 காலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

Previous Post

இசை தான்  படத்திற்கு உயிர் இசையமைப்பாளர் ஜூபின்

Next Post

ZEE5 யின்  “ விநோதய சித்தம்”  திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது !

Next Post
ZEE5 யின்  “ விநோதய சித்தம்”  திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது !

ZEE5 யின்  “ விநோதய சித்தம்”  திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது !

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 

    5 shares
    Share 5 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.