• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எனக்கு 26 உனக்கு 36 : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’

by Tamil2daynews
October 27, 2021
in சினிமா செய்திகள்
0
எனக்கு 26 உனக்கு 36 : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
                                               
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன . காலம் ,கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.
காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கணவனை விட  வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.
26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் ‘ஊர்வசி’  வெப் சீரிஸ் .
வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது. நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.
சென்னையில் ஒரே அறையில்  தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர் தான் கதாநாயகன். வாடகை டாக்சி ஓட்டும் ஒருவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில் பயணியாக வரும் ஒருத்திக்கும் இடையே பரஸ்பரம் புரிதலும் அன்பும் காதலும் ஏற்படும் சூழல் வருகிறது.
இருவருக்குள்ளும் பூசல்கள் முரண்பாடுகள், ஏன் சண்டைகள் வரை செல்கிறது. பிரிவும் நேர்கிறது. அதன்பிறகு ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்து இணைகிறார்கள் என்ப
தைப்பற்றி சொல்லும் கதை இது.
இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ் .கே.எஸ். கார்த்திக் கண்ணன்.  இவர் ஏற்கெனவே ‘திடல் ‘  படத்தை இயக்கியவர். ஏராளமான குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்.இவரது
 ‘ நிறம்’ என்ற குறும்படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்றது.
ஊர்வசி இணைய தொடரில் நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார். அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள் .கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள்  நேத்ரா, ஜெஸிகா நடிக்கிறார்கள்.
கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது .இதே போல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது.
காலமாற்றத்தில் காதலின் போக்கைச் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகிறது. இதை ஆர்ஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது.  ஒளிப்பதிவு சேகர் ராம் ஜெரால்டு, இசை பாடல்கள் ஸ்ரீ சாய் தேவ், எடிட்டிங் -ரோஜர், சண்டைக்காட்சிகள் – ஓம் பிரகாஷ் -கலை இயக்கம் சிவா என தொழில்நுட்ப கூட்டணி அமைத்து இத்தொடரை உருவாக்குகிறார்கள்.
Previous Post

பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் !

Next Post

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Next Post
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.