• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனதைக் கவரும் தரமான படைப்பு “போத்தனூர் தபால் நிலையம்”…

by Tamil2daynews
November 9, 2021
in சினிமா செய்திகள்
0
மனதைக் கவரும் தரமான படைப்பு “போத்தனூர் தபால் நிலையம்”…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Passion Studios சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இணைந்து வழங்கும், இயக்குநர்
பிரவீன் இயக்கும், திரைப்ப்படம் “போத்தனூர் தபால் நிலையம்” !
மனதை கவரும் தரமான படைப்புகளை தருவதை, லட்சியமாக கொண்டிருக்கும் Passion Studios நிறுவனம்,  தென்னிந்திய திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “சீதக்காதி, அந்தகாரம், என்னங்க சார் இங்க சட்டம்” திரைப்படங்கள் எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. திரைக்காதலர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து ஆச்சர்யகரமான படைப்புகளை உருவாக்கி வருகிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, “போத்தனூர் தபால் நிலையம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் இயக்கத்தில்,  Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இப்படத்தை தயாரிக்கின்றனர். மூன்று பாகங்கள் கொண்ட கதைகள் இணையும் சஸ்பென்ஸ், க்ரைம், விசாரணை திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.
இதன் முதல் பாகம் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், போத்தனூர் தபால் நிலையம் பின்னணியில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படக்குழு இப்படத்தின் முழு படப்பிடிப்பையும்  முடித்துவிட்டது. விரைவில் முதல் பாகத்தினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்று பாகத்திற்கான படப்பிடிப்பை ஜனவரி 2022 ல் துவங்கி ஒரே கட்டமாக நடத்தவுள்ளனர்.
இந்திய திரை உலகில் முதல்முறையாக, தபால் நிலைய பின்னணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும். 1990 காலகட்டத்தில் நடக்கும் கதையென்பதால், அக்காலத்தை திரையில் கொண்டுவர,  கலை இயக்குநர் குழுவும்,  படக்குழுவும்  மிகவும் கவனமுடன் நுணுக்கமான விவரங்களுடன், கடுமையாக உழைத்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் பிரவீன் இப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அஞ்சலி ராவ் நாயகியாக நடிக்கிறார். 75 க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் கோயம்புத்தூரை சேர்ந்த  தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிகர்கள். பல கட்ட ஆடிசனுக்கு பிறகே, இந்த நடிகர்கள் இப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயக்குநர் பிரவீன் அவர்கள் VFX மற்றும் அனிமேஷன் துறையில் 13 வருட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘கோச்சடையான்’ படத்தில் டெக்னிகல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
Previous Post

பலத்த மழை எதிரொலி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்…

Next Post

ராசக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.

Next Post
ராசக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.

ராசக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

    0 shares
    Share 0 Tweet 0
  • வைபவ் முருகேசன் வெறும் புகழைத் தேடி ஓடவில்லை.. அவர் தனக்கான நிரந்தர இடத்தை கட்டமைத்து வருகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.