• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜெயில் – விமர்சனம் 3/5

by Tamil2daynews
December 9, 2021
in சினிமா செய்திகள், விமர்சனம்
0
ஜெயில் – விமர்சனம் 3/5
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜி வி பிரகாஷ்குமார் , அபர்ணதி, ராதிகா, நந்தன் ராம், பசங்க பாண்டி, ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரது நடிப்பில், அங்காடித்தெரு படத்தின் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜெயில்’.
கதைப்படி, 
வட சென்னையை மையப்படுத்தி கதை நகர்கிறது. வட சென்னையில் காவேரி நகர் பகுதியில் ராதிகாவின் மகனாக வருகிறார் ஜி வி பிரகாஷ். இவரது நண்பராக வருபவர் நந்தன் ராம். இருவருக்கும் போதை பொருளை கைமாற்றுவதும்,  பொருட்களை திருடுவதும் தான் பிரதான வேலை.
இவர்களது மற்றொரு நண்பராக வருபவர் பாண்டி. சிறுவயதில் திருடியதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, விடுதலையாகி வெளியே வருகிறார். மூன்று நண்பர்களும் மீண்டும் இணைகின்றனர்.
பாண்டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வேலை தேடிஅலைகிறார். காவேரி நகர் என்றால் வேலை தர முடியாது என்று பலரும் கூறிவிடுகின்றனர்.
இதனால், தனக்கு சைதாப்பேட்டை எனக்கூறி பெட்ரோல் பங்கில் பணிக்குச் சேர்கிறார்.
இந்நிலையில், போதை கடத்தும் தொழிலில் நந்தன் ராம் , ஜிவி பிரகாஷ் குருப்புக்கும் மற்றொரு கேங்க் கானா முத்து குருப்புக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.
ஒருநாள் ஜி வி பிரகாஷ், நந்தன் ராம் மற்றும் பாண்டியை கானா முத்து கேங்க் கொல்ல விரட்டுகிறது. நந்தன் ராமை போட்டுத் தள்ளுகிறது கானா முத்து கேங்க். இதனால் கோபமடைந்த பாண்டி, கானா முத்துவின் நண்பனை கொன்று விடுகிறார்.
மீண்டும் சிறைக்குச் செல்கிறார் பாண்டி. தனித்து விடப்படுகிறார் ஜிவி பிரகாஷ். நண்பனுக்காக கானா முத்து ஜி வி பிரகாஷை பழி தீர்த்தாரா.? பாண்டியை சிறையில் இருந்து ஜி வி காப்பாற்றினாரா.? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜி வி பிரகாஷ்குமார், கர்ணா கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். வட சென்னைக்கே உரித்தான உடல்மொழியில் மிரட்டியிருக்கிறார். நண்பனுக்காக முதல் ஆளாய் நிற்பதும், காதலியுடனான ரொமான்ஸ் காட்சியில் ரொமாண்டிக் செய்வதும் என தனக்கான  பணியை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷின் நண்பர்களாக வந்த நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சரியான தேர்வு. இருவருக்கும் ஜி வி பிரகாஷிற்கு நிகரான கதாபாத்திரங்கள். தங்களது சுமையை அறிந்து அதற்கேற்றாற் போல், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் இருவரும்.
அதிலும், நந்தன் ராம் வட சென்னை வாலிபரின் மேனரிசத்தை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார்.
நாயகி அபர்ணதி, தமிழ் சினிமாவுக்கு புதுவரவு. அராத்து பிடித்த பெண்ணாக கலகலவென  ஜொலித்திருக்கிறார். காத்தோடு காத்தானேன் பாடலில் ரொமன்ஸை அள்ளிக் கொட்டியிருக்கிறார் அபர்ணதி.
அதிக நாட்களாக காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே பார்த்து வந்த ரவிமரியாவை சட்டென வில்லனாக பார்க்கும் போது அதை அவ்வளவு வலுவாக கொடுக்காததால், ரவிமரியா கதாபாத்திரத்தை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் பார்வையும், மிரட்டலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏனோ பொருந்தாமலே நிற்கிறது.
பாண்டிக்கு ஜோடியாக வந்த சரண்யா ரவிச்சந்திரனின் நடிப்பும் எதார்த்தமானது. இன்னும் சற்று கூடுதல் காட்சி கொடுக்கப்பட்டிருந்தால், கதாபாத்திரத்தை இன்னும் சிறப்புற செய்திருப்பார்.
ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரம் பெரிதாக சொல்லும் அளவிற்கு வலுவானதாக கொடுக்கப்படவில்லை.
இன்னமும் வட சென்னை இளைஞர்களை இப்படியாக காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா.? இயக்குனர் வசந்த பாலன் சார் அவர்களே.  ஜி வி பிரகாஷ் போனை திருடுவதும், லேப்டாப் திருடுவதும், கஞ்சா விற்பதும்  என காட்சிகளை காண்பித்தது வட சென்னை இளைஞர்கள் மீதான கொடூர பார்வையை இந்த இயக்குனர்கள் என்றுதான் மாற்றுவார்களோ. ?
தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரம், எடுக்கப்பட்ட காட்சியமைப்பு, திரைக்கதை என அனைத்தும் பலமாக இருந்தும், கூற வந்த விஷயத்தை கூறாமல் சென்றது பெரும் ஏமாற்றமே. புலம் பெயர்ந்து வரும் குடிவாசிகளின்  நிலையை, அவர்களின் வலியை இன்னும் சற்று வலுவாக கூறியிருந்தால், ஜெயிலின் வலி பார்ப்பவர்களையும் சென்றடைந்திருக்கும்.
பின்னனி இசையாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும் இரண்டிலும் ஜி வி பிரகாஷ் தனது தனித்துவத்தை நிருபித்திருக்கிறார். காத்தோடு காத்தானேன் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் பாடலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு வேகம் ஏற்றியிருக்கிறது. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் வலுவானதாக இல்லை.
ஜெயில் – சொல்ல வந்தது ஒன்று, சொல்லிவிட்டு சென்றது ஒன்று…
Previous Post

‘மட்டி ‘ படத்திற்கு சர்வதேச அளவில் விருது கிடைக்கும் : தயாரிப்பாளர் கே ராஜன் நம்பிக்கை !

Next Post

ஒரு மணி நேரத்தில் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை கண்டறியும் கருவியினை கிருத்திகா உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

Next Post
ஒரு மணி நேரத்தில் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை கண்டறியும் கருவியினை கிருத்திகா உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

ஒரு மணி நேரத்தில் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை கண்டறியும் கருவியினை கிருத்திகா உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.