• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் களமிறங்கும், நடிகர் ஜெய் !

by Tamil2daynews
December 12, 2021
in சினிமா செய்திகள்
0
3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் களமிறங்கும், நடிகர் ஜெய் !
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ஜெய்யுடைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தீராத ஆர்வம் மற்றும் அதீத காதல், பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்ததே. நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும்,  மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது மிகுதியான ஆர்வமும், தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இருந்துவந்துள்ளது. கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய்,
தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில்  பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6.
இந்த ரேஸ் பந்தய  போட்டிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10, 2021) தொடங்குகிறது. சனிக்கிழமை (டிசம்பர் 11, 2021) தகுதிச் சுற்றும், ரேஸ் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) அன்றும் நடைபெறுகிறது. வழக்கமாக, இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று தடங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும். இந்த ஆண்டு, போட்டி சென்னை மைதானத்தில் (MMRT – Madras Motor Racing Track) நடக்க இருப்பதால், சென்னைவாசிகள் மயிர்க்கூச்செரியும்  அனுபவத்தை பெறமுடியும்.  நடிகர் ஜெய் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. வழக்கமாக அவருக்கு வருண் மணியன் Radiance Reality நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. திரை வல்லுநர்கள் திரைத்துறையுடன் மட்டும் நிற்காமல் ஜெய் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஸ்பான்சர் செய்வதும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்  மீது ஆர்வம் காட்டுவதும், மிகவும் அழகான தருணமாக இருக்கிறது.
2021 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் அவர்களுக்கு மிக முக்கியமான வருடமாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள், அவரின் நடிப்பில் திருப்புமுனையை தரும் வகையில் நேர்மறையான பாராட்டுகளையும், வரவேற்பையும் குவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில், அவர் திரைத்துறையில் இசையமைப்பாளாராக அறிமுகமாவது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அவரது விளையாட்டு வீரர் அவதாரம், அவருக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது.
Previous Post

ஆன்டி இண்டியன் விமர்சனம்

Next Post

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பதில்

Next Post
தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பதில்

தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? - நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பதில்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை அசத்தியுள்ளது டிஸ்னி + ஹாஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.