• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

’மணிகர்னிகா’ மர்மம் உடைக்கும் கங்கனா!

by admin
January 5, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
’மணிகர்னிகா’ மர்மம் உடைக்கும் கங்கனா!
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு. ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம். மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன்.

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன.

அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது. காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது. அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன் என்றார் நாயகி.

Previous Post

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Next Post

Actor Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR

Next Post
Actor Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR

Actor Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.