• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“அஷ்டகர்மா” திரைவிமர்சனம்

by Tamil2daynews
February 13, 2022
in விமர்சனம்
0
நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான ‘மகான்’ படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
0
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Ashtakarma photos, Ashtakarma Tamil movie posters, first look posters, latest photos- filmiforestமுற்றிலும் வித்தியாசமான திரைக்கதையுடன் தமிழ் சினிமாவில் சில படங்கள் வந்து ரொம்ப நாள் ஆகுது அந்தவகையில் வந்திருக்கும் படம்தான் அஷ்டகர்மா அமானுஷ்ய அதிர்வலை, செய்வினை சதிவலை என கலந்துகட்டிய திகில் திரில் காம்போவாக ‘அஷ்டகர்மா.’ஏவல், பேய், பிசாசு, பில்லி சூனியம் என்பதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லிக்கொண்டிருக்கிற அறிவியல் அறிவாளிகள் ஒருபக்கம். பேய் ஓட்டுதல், செய்வினை வைத்தல், வைத்ததை எடுத்தல் என்றிருக்கும் சாமியார்கள், மந்திர தந்திர மாயாஜாலக்காரர்கள் ஒருபக்கம்.
Ashtakarma Movie Cast and Crew, Release Date Details » Movie Review - India A2Zகதையின் நாயகன் மனோதத்துவ டாக்டர்; அறிவியலின் பக்கம் நிற்பவர். சாமியார்கள் நிகழ்த்தும் சித்துவேலைகளின் தில்லுமுல்லு பின்னணியை ஆதாரத்துடன் தோலுரிப்பவர். அவரையே அமானுஷ்ய சக்தி என்ற ஒன்று இருக்கிறது; செய்வினை வைப்பதெல்லாம் உண்மைதான் என நம்ப வைக்கிற சம்பவங்கள் அரங்கேறுவதே அஷ்டகர்மாவின் அஸ்திவாரம்!கதாநாயகியை எப்போதும் ஏதோவொரு பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது. அலசி ஆராய்ந்தால், அவரது குடும்பத்தில் ஒருவர் வைத்த செய்வினைதான் காரணம் என்பதும், செய்வினை வைத்தது ஏன் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியூட்டுகிறது. தன்னைச் சுற்றும் செய்வினையிலிருந்து மீண்டுவர அவர் என்ன செய்தார் என்பதே கதை…திரைக்கதையோட்டத்தில் கதாசிரியர் ஒருவர் கதை எழுத எழுத, எழுதுவதெல்லாம் அப்படியே நடப்பது, பிரமாண்ட பங்களாவுக்குள் அமானுஷ்ய சக்தி உலவுவது, அது உள்ளே நுழைகிற மனிதர்களை பயங்காட்டி பதட்டமூட்டுவது என திகில் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட் சங்கதிகள் அணிவகுக்கின்றன. இயக்கம்: விஜய் தமிழ்செல்வன்நாயகன் சி.எஸ். கிஷன், நாயகிகள் ஷிரிதா சிவதாஸ், நந்தினிராய் என எவர் நடிப்பிலும் பெரிதாய் குறையில்லை. சாமியாராய், மந்திரவாதிகளாய், பேய் ஒட்டுபவர்களாய் வருகிறவர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது பலம்.
விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டொஷிலா படத்திலும் விவாதநிகழ்ச்சித் தொகுப்பாளராகவே வருகிறார். அவரது வளமான வசன உச்சரிப்பு அழகு!இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்ற பலான காட்சியொன்றை வைத்து அதில் நடிக்க பலாச்சுளையாய் இளமை திமிறும் பட்டாம்பூச்சியொன்றை பிடித்துப் போட்டது போனஸ்!செய்வினை வைப்பது பற்றி இந்துமதத்தின் வேதங்களிலேயே குறிப்புகள் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை விவரிப்பது ஆச்சரிய உணர்வைத் தராமலிருக்காது!திகில் காட்சிகளை அதே உணர்வுடன் ரசிகர்களுக்கு கடத்துகிறது எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசை.டி.ஆர். எழுதி, பாடிய ஒரு பாடலும் படத்தின் நிறைவில் உண்டு.ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கச்சிதம்.சற்றே வித்தியாசமான கதைக்கருவை கையிலெடுத்த இயக்குநர் திரைக்கதையையும் அதே வித்தியாசத்தோடு கையாண்டிருந்தால் அஷ்டகர்மா வசூலில் அதிர்ஷ்டகர்மாவாகியிருக்கும்!
Previous Post

நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Next Post

ஆதிராஜன் இயக்கத்தில் இசைஞானியின் 1417வது படம்.

Next Post
நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான ‘மகான்’ படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆதிராஜன் இயக்கத்தில் இசைஞானியின் 1417வது படம்.

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.