• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற இப்தார் விருந்து..!

by Tamil2daynews
April 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற இப்தார் விருந்து..!
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளையொட்டி  இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலராலும் நன்கு அறியப்பட்டது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் மாண்பைப் போற்றும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி, பசித்தவர்களுக்கு உணவிடும் விருந்தாளி எனும் திட்டம் என ரெயின்ட்ராப்ஸ் எண்ணற்ற சமூக பணிகள் ஆற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இப்தார் விருந்து மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில்வே அதிகாரிகள் கிளப்பில் இப்தார் விருந்து நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, ஆற்காடு இளவரசர் திவான் நவாப் முகமது ஆசிப் அலி, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், தொழிலதிபர் சி.கே.குமரவேல், டாக்டர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், பின்னணி பாடகர் சம்சுதீன், நடிகர்கள் வெங்கட், நீலிமா மற்றும் மவுண்ட் ரோடு தர்கா அறங்காவலர் சையத் மன்சூருதீன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத 20 ஏழை, எளிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கூறியதாவது, உலகம் முழுதும் உள்ள மனிதர்கள் அனைவரும் சமம். இதில், நீ வேறு, நான் வேறு என்று வேற்றுமை பாராட்டுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. நமது முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக வேற்றுமை உள்ளது. சக மனிதர்கள் நெஞ்சங்களில் வேற்றுமை விதைக்கத் தொடங்கியதே வளர்ச்சியை நோக்கிச் சென்ற இந்தியா, தற்போது பின்னோக்கிச் செல்லக் காரணம்.
பிரிவினையால் சண்டை, அழிவு போன்ற தீய விளைவுகள் தான் மிஞ்சும். எனவே, இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி செல்லும். முதலில் சுய வளர்ச்சியை எண்ணுங்கள், பிறகு கூட்டாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் இவ்வாறு அவர் கூறினார். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில், மற்ற பண்டிகை மற்றும் விழாக்களை போலவே ரமலான் திருநாளை எவ்வித மத வேறுபாடுகளுமின்றி அனைவரும் கொண்டாட வேண்டும். அந்த வகையில் ரமலான் இப்தார் விருந்து கொண்டாட்டத்துடன் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்ததில் ரெயின்ட்ராப்ஸ் பெருமை கொள்கிறது இவ்வாறு அவர் கூறினார்.
Previous Post

புதிய ஹோட்டலை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த நடிகை தான்யா ஹோப்

Next Post

மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

மக்களை மகிழ்விக்கும் 'மாயோன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.