• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நிகில் நடிக்கும் “ஸ்பை”..!

by Tamil2daynews
April 19, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நிகில் நடிக்கும் “ஸ்பை”..!

திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர்  கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள  இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும்   ED entertainment சார்பில்   K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர்.

நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.  இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட்  மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக  நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன்  நடந்து வருவது  ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே  தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.

நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகில்  முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார், இந்தப் படம் 2022 ஆண்டு தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை வெளியிடும்போது ” 2022 தசரா பண்டிகையில் திரையரங்குகளை தாக்க வருகிறது ” என்று வெளியிட்டு இதனை படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை இதன் தயாரிப்பாளர் K ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார், இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் கேரி BH அவர்களே  மேற்கொண்டுள்ளார், மேலும் ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.  இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று  படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில்  பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது, அதற்காக படக்குழுவினர்  தொழில்நுட்ப  குழுவை  வலுவாக அமைக்க திட்டமிட்டுள்ளனர், தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா இணைந்துள்ளார், மேலும் சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டண்ட் டீம் கொண்டு உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கின்றார். அர்ஜுன் சுரிசெட்டி இந்தப் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார், மேலும் ரவி அந்தோனி புரொடக்சன் டிசைனராக பணியாற்றுகின்றார்.

படத்தின் புரடக்சன் பணிகளை ED entertainment சார்பில்  சிஇஓ  சரண் தேஜ் உப்பலபதி மேற்கொள்கிறார், இந்தப் படம் தவிர மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதில் ஒன்று “டி ஜே தில்லு” படம் மூலம் பிரபலமான இயக்குனர் விமல் கிருஷ்ணாவை வைத்து உருவாக்கப் போவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

நடிகர்கள் குழு – நிக்கில் சித்தார்த்தா , ஐஷ்வர்யா மேனன், அபினவ் கோமாடம், சன்யா தாகூர், ஜிஸ்சு சென் குப்தா , நிதின் மேத்தா மற்றும் ரவி வர்மா போன்ற மிகப் பெரிய நடிகர் பட்டளாம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
தொழில்நுட்ப குழு
இயக்குனர் மற்றும் எடிட்டர்: கேரி BH
கதை & தயாரிப்பு: K ராஜ சேகர் ரெட்டி
CEO: சரண்தேஜ் உப்பலாபதி
வழங்குபவர்: Ed entertainments
எழுத்தாளர்: அனிருத் கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர்: ஶ்ரீசரண் பகாலா
ஒளிப்பதிவு: ஜூலியன் அமரு எஸ்ட்ராடா
கலை இயக்குனர்: அர்ஜூன் சூரிஷெட்டி
உடைகள்: ராகா ரெட்டி, அகிலா தசரி, சுஜீத் கிருஷ்ணன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரவி அந்தோனி
Previous Post

நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான அனுபவம்..!

Next Post

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

Next Post

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

Popular News

  • ‘பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.