• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கவின்-அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

by Tamil2daynews
April 22, 2022
in சினிமா செய்திகள்
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கவின்-அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார், பல தரமான திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்,  அவை தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில்  உள்ளன. அவற்றில் ஒன்று அவரது “புரடக்சன்: 4”, இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்குகிறார், இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான “டாடா” இன்று  கோலகலமாக வெளியிடப்பட்டது.
பட தலைப்பு குறித்து இயக்குநர் கணேஷ் K பாபு கூறுகையில், 
அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை   வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள், அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இந்த தலைப்பு இருக்கும்.

படத்தின் மொத்தக் குழுவினரும் படத்தை மிகச்சிறப்பாக வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது, முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். முழுப்படப்பிடிப்பும்  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் நிலையில், K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’  படம் வெளியானதிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தில் திரையில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள். மேலும்  ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவில் எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), மற்றும் சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
Previous Post

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடிகை ராதிகா..!

Next Post

ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”!

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் "மாஸ்க்"!

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.