• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

by Tamil2daynews
April 27, 2022
in சினிமா செய்திகள்
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

 

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் கரங்கள்’ என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இந்த வாகனம் இவர்களுக்கான உணவு வழங்குவதற்கு பயன்படும். இந்த வாகனத்தை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால், டாக்டர் திருமதி சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி வரும் நடிகர் சூர்யாவின் சேவை, வீதியோர மற்றும் வீடற்ற மக்களுக்காக தொண்டாற்றி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றி வருவதற்கு சமூகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனதார பாராட்டி பாராட்டுகிறார்கள்.

Previous Post

இந்தியில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா

Next Post

“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

"அக்கா குருவி' படம் மாதிரி படங்கள் வரவேண்டும்.." இளையராஜா.

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.