• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’D 3’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வெங்கட்பிரபு

by Tamil2daynews
June 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
D 3’ டைட்டில் லுக்கை  வெளியிட்ட வெங்கட்பிரபு

அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க, சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இன்று (ஜூன்-25) இந்தப்படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.
ஒரேநாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் இதுபோன்ற கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும். இந்த  ’D 3’படம் ஒரே நாளில் நடக்கும்
கதைக்களம் கொண்டது.

பெரும்பாலான படப்பிடிப்பை குற்றாலத்திலேயே நடத்தியுள்ளனர்.

படத்தின் இயக்குநர் பாலாஜி படம் பற்றி கூறும்போது, “நான் கேள்விப்பட ஒரு உண்மை விஷயம் பற்றி, அதேசமயம் இதுவரை வெளிவராத விஷயம் பற்றி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்”  என்கிறார்.
மேலும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் பாலாஜி கூறும்போது, “இயற்கை ஏற்படுத்திய பல பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.. குற்றாலத்தில் மழை சீசன் இல்லாத சமயத்தில் தான் படப்பிடிப்பை நடத்த துவங்கினோம்.. ஆனால் படப்பிடிப்பு நடந்த எழுபது சதவீத நாட்களில் எதிர்பாராத விதமாக மழையின் குறுக்கீட்டுடன் தான் படப்பிடிப்பை நடத்த வேண்டி இருந்தது.
கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்த சமயத்தில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவந்த 3௦ வயது நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்..
அதேபோல சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஒருநாள் வாடகையாக மட்டுமே ரெண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி படப்பிடிப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம்.. ஆனால் அன்றைய தினம் காலை படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திறங்கிய நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வர, படப்பிடிப்பு கேன்சல் ஆனது.  இப்படி நிறைய அனுபவங்களை கடந்து இந்தப்படம் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார். .
நடிகர்கள் ; பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, வர்கீஸ் மேத்யூ, அபிஷேக்,
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு ; மனோஜ் (பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்) மற்றும் சாமுவேல் காட்சன் (ஜேகேஎம் புரொடக்சன்ஸ்)
இயக்கம் ; பாலாஜி
இசை ; ஸ்ரீஜித் எடவானா
ஒளிப்பதிவு ; மணிகண்டன்
படத்தொகுப்பு ; ராஜா ஆறுமுகம்
ஸ்டண்ட் ; ராம்போ விமல்
Previous Post

SonyLIV ஒரிஜினல் சீரிஸ் “மீம் பாய்ஸ்’ டீஸர் வெளியானது !!!

Next Post

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

Next Post

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் 'செஞ்சி'

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.