• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“அரபிகுத்து” பாடல் புகழ் ஜானி மாஸ்டர் நாயகனாக அறிமுகம் ..!

by Tamil2daynews
August 23, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“அரபிகுத்து” பாடல் புகழ் ஜானி மாஸ்டர் நாயகனாக அறிமுகம் ..!
‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும்  இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.
இந்த விழாவில் இயக்குநர் – தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் விட்டலா பேசுகையில், “கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி, ஹரேஷ் படேலுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி மாஸ்டருடன் பழகினேன். மாஸ்டர் அவருக்கென ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 20 நிமிடங்களில் நான் சொன்ன கதையின் மையப் புள்ளி மிகவும் பிடித்து போக, எங்கள் ஸ்கிரிப்டை அவர் ஓகே செய்தார். முன்பு அரசியல் செய்திகள் எந்தச் சேனலிலும் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தது இல்லை, ஆனால் இப்போது அவை 24/7 இடம்பெறுகின்றன.   அனைவரும் அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் படம் வணிக பொழுதுபோக்கு & சமூக செய்திகள் நிறைந்த அரசியல் டிராமாவாக இருக்கும், இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 15ல் துவங்கி மூன்று கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறவுள்ளன.
ஜானி மாஸ்டர் கூறுகையில்,
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் எங்கள் படத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக எனது அடையாளத்தை வளர்க்க, இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் அடுத்த கட்டத்திற்கு வர முடிவு செய்துள்ளேன். நான் ‘சினிமா பண்டி’யைப் பார்த்தேன், அதில் விகாஸின் நடிப்புப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் தலைப்பு ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பது எழுத்தாளர் நரேஷ் காரின் யோசனை, இந்த நல்ல தலைப்பை வழங்கிய அவருக்கு நன்றி. நாங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை ஆசிர்வதித்த ஹீரோ ஷர்வானந்த், ஆயுஷ் ஷர்மா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி. நேற்று ஆயுஷ் ஜியுடன் ஒரு பாடலை இப்படத்துக்காக முடித்துள்ளேன்.
சினிமா பண்டி புகழ் விகாஸ் கூறுகையில்,

 ஜானி மாஸ்டருடன் இணைந்து பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது போதுமான கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய நல்ல அரசியல் டிராமாவாக இருக்கும். இது நகைச்சுவை, நையாண்டிகள், சமூக செய்திகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.

நடன இயக்குனர் கணேஷ் மாஸ்டர் பேசுகையில்,
 “யதா ராஜா ததா ப்ரஜா” படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் பிளாக்பஸ்டராக மாற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த சிறந்த வாய்ப்பை எங்கள் அண்ணன் ஜானிக்கு வழங்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தின் இசை பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும்.
இசையமைப்பாளர் ரதன் கூறுகையில்,

“பாடல்களை ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டர்  சிறந்த அனுபவமாக  மாற்றிவிடுவார்.  ஆச்சர்யமாக எங்கள் படத்தில் ஜானி  மாஸ்டர் நாயகனாக நடிக்கிறார். எனது குழுவினர் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்து வருகின்றனர், ஆல்பம் மிகச் சிறப்பாக, வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் வேலாயுதன் கூறுகையில்..

நான் கேரளாவைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு ஜானி மாஸ்டரை சந்தித்தேன். இந்தப் படத்தைப் பற்றி அவர் என்னிடம் கூறினார். நான் ஹைதராபாத் வந்தவுடன், ஸ்ரீனிவாஸ் விட்டலா காரு எனக்கு முழுக் கதையையும் விவரித்தார், மிகவும் பிடித்திருந்தது. ஒரு குழுவாக சிறப்பான படைப்பை தருவோம் என நம்புகிறேன்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:
பேனர்:  Om Movie Creations & Sri Krishna Movie Creations
தயாரிப்பாளர்கள்: ஸ்ரீனிவாஸ் விட்டலா, ஹரேஷ் படேல்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீனிவாஸ் விட்டலா
ஒளிப்பதிவாளர்: மனோஜ் வேலாயுதன்
இசையமைப்பாளர்: ரதன்
கலை இயக்குனர்: பாபா
போஸ்டர் வடிவமைப்பாளர்: தானி ஏலே
நிர்வாக மேலாளர்: S.ரங்க பாபு
Previous Post

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’

Next Post

‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

Next Post

'நட்சத்திரம் நகர்கிறது' இசை வெளியீட்டு விழா

Popular News

  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • V R COMBINES விமலா ராஜநாயகம்_ தயாரிக்கும் _மூன்றாவது படம் வஞ்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.