• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

by Tamil2daynews
October 31, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் D. அருளானந்து வழங்கும் ஃபிலிம்மேக்கர் ஹரி ஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.

 

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார். இந்தக் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறது. நல்ல உணர்வைத் தரக்கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக் கூடிய வகையிலான படமாகவும் திரும்பி போகும் போது நல்ல நினைவுகளைத் தரக்கூடியப் படமாகவும் இது அமையும்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர். டி. அருளானந்து (ரிச் இந்தியா டாக்டர் டி. அருளானந்து என்றும் அறியப்படுகிறார்) தயாரித்திருக்கிறார். ‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG விக்னேஷ்,
எடிட்டிங்: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG வருண்,
கலை:  ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR,
இசை: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்.

Previous Post

‘பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன்

Next Post

‘ ஐமா ‘சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

Next Post

' ஐமா 'சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • அந்தரன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரு போட்ட கோடு – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

July 1, 2026

அந்தரன் – விமர்சனம்

July 1, 2026

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

July 1, 2026

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது

July 1, 2026

மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

July 1, 2026

மீசைய முறுக்கு தம்பி’ – ‘பாவி டீச்சர்’ நிஜ வாழ்க்கை ஜோடி!

July 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.