• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிலிர்க்க வைக்கும் காட்சிகளில் அதிரும் ‘ஓநாய்’..!

by Tamil2daynews
November 19, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிலிர்க்க வைக்கும் காட்சிகளில் அதிரும் ‘ஓநாய்’..!
ரசிகர்களின் காத்திருப்பு முடியும் தருணமிது! மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் ப்ரி-ரிலீஸ் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வைரல் ஆகியுள்ள நிலையில், பெடியாவின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. படக்குழுவினரிடம்  இருந்து இன்னும் அப்டேட்டுகளை  ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், அவர்களை உற்சாகப்படுத்த பேடியாவின் வெளியீட்டிற்கு முந்தைய காணொலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
‘தி பெடியா லெஜண்ட்: ப்ரி-ரிலீஸ் ப்ரோமோ’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த காணொலி, ஓநாய் மனிதன் பற்றிய புதுமையான கதையை விவரித்து நம்மை கவர்கிறது.
பழங்கால அருணாச்சலி நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சாதாரண மனிதரான பாஸ்கரின் கதையை பெடியா சொல்கிறது, புராண காலத்து விலங்கு ஒன்று கடித்ததால் ஓநாயாக அவர் மாறத் தொடங்குகிறார்.
இந்த சாபத்திலிருந்து பாஸ்கர் தப்பித்தாரா, இல்லை அவருக்குள் புகுந்த அசுரன் வென்றானா, அடுத்து என்ன நடக்கும், போன்ற
சிலிர்க்க வைக்கும் கேள்விகளை காணொலி எழுப்புகிறது.
திரையரங்குகளில் பார்வையாளர்கள் திகில் கலந்த பரவசம் அடையப்போவதை இந்த பரபரப்பான ப்ரி-ரிலீஸ் புரோமோ உறுதிப்படுத்துகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது.
Previous Post

ஒரு ஊரை எதிர்த்து குடும்பமே கபடி விளையாடும் திரைப்படம் ”பட்டத்து அரசன்”

Next Post

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய் !

Next Post

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய் !

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.