• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

உடன்பால்- விமர்சனம்

by Tamil2daynews
December 28, 2022
in விமர்சனம்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உடன்பால்- விமர்சனம்
ஆக்சன், குடும்ப, க்ரைம் என பல வித உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.  இது அற்புதமான எள்ளல் சுவை கொண்ட திரைப்படம். பலருக்கும் எள்ளல் என்பதற்கும் நகைச்சுவை என்பதற்குமான வித்தியாசம் புரிவதில்லை.
வாழ்க்கையின் எதார்த்தத்தை பகடி செய்வது.. அதில நகைச்சுவையுடன் சேர்ந்த ஆதங்கம், தத்துவார்த்த சுட்டிக்காட்டல் இருக்கும்.
இதையெல்லாம் படித்துவிட்டு, படம் ஏதோ நமக்கு அந்நியமாக இருக்கும் என பயப்பட வேண்டாம். ரசித்துப் பார்க்கும் படம்.
அதே நேரம், வாழ்க்கையின் நிலையாமையையும், மனிதர்களின் சுயநல வக்கிரங்களையும்  எள்ளல் செய்கிறது படம்.
சார்லிக்கு  இரண்டு மகன்கள், ஒரு மகள்.  அனைவருக்கும் திருமணம் ஆகி விட மூத்த மகனுடன் தன் சொந்த வீட்டில் வசிக்கிறார்.
மகனும் மகளும் சேர்ந்து திட்டமிட்டு அவரது வீட்டை விற்று  பணம் தர கோருகிறார்கள். வாழும்வீட்டை விற்பதா என சார்லி மறுக்கிறார்.
இந்த நிலையில், ஊரில் இருக்கும் ஒரு அங்காடிக்கு சார்லி செல்கிறார். அந்த நேரத்தில் அங்காடி இடிந்து விழுந்ததாக செய்தி வருகிறது. விபத்தில்  இறந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் அரசாங்கம் தருவதாக அறிவிக்கிறது.
20 லட்ச ரூபாய் கிடைக்கிறதே என்ற ஆவலில் குடும்பத்தினர் சில திட்டங்கள் போடுகிறார்கள்.
ஆனால் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. அதன் பிறகு என்ன என்பதுதான் கதை.
சார்லியின் மூத்த மகனாக வரும் லிங்கா குடும்ப செலவுகளை சுமக்க முடியாத அழுத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநலம் மேலிடும்  உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தங்கையும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஈகோவில் மோத.. இடையில் அவர் தவிக்கும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.
அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்நதியின் நடிப்பும் அற்புதம்.
சார்லின் மகளாக காயத்ரியும் இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார்.  அவரது  கணவராக வரும் விவேக் பிரசன்னா எப்போதும் போல் சிறப்பான நடிப்பு.
லிங்கா, காயத்ரியன் கடைசி தம்பியாக வரும் தீனாவும் யார் இவர் என கேட்க வைக்கிறார்.
இடைவேளை வரை படம் விறு விறு. அதன் பிறகு சற்றே மெதுவாக நகர்ந்தாலும் ரசிக்கவைக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரு வீட்டுக்குள்ளேயே கோணங்களை மாற்றி மாற்றி தொய்வில்லாமல் காட்சிகளை அளித்திருக்கிறார். சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் சிறப்பு.
ஆஹா தமிழ் ஒரிஜினலாக இந்தப் படத்தை தயாரித்திருக்கும் கே.வி.துரைக்கு  வாழ்த்துகள்.
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2022 இன்று சென்னையில் துவங்குகிறது.

Next Post

கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, கண்ணீரில் முடிந்த காலேஜ் ரோடு படம்.

Next Post

கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, கண்ணீரில் முடிந்த காலேஜ் ரோடு படம்.

Popular News

  • கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.