• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதிக்கிறார்

by Tamil2daynews
January 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதிக்கிறார்

 

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார்.

இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக, மன அமைதி தரும் ஆண்டாக  இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
Imageபுத்தாண்டு மலர்கின்ற இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர இருக்கின்றது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்கள் வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி… இப்படி என் படவரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன.
Imageகிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன்.

நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன். தை திங்கள் பிறந்ததும் இதை வெளியிட இருக்கின்றேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.

Previous Post

காலேஜ்ரோடு- விமர்சனம்

Next Post

அதிரடி ஆக்ஷனில் சாக்ஷிஅகர்வால்!

Next Post

அதிரடி ஆக்ஷனில் சாக்ஷிஅகர்வால்!

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.