• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் திரைப்பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..!

by Tamil2daynews
January 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விக்ரம் பிரபுவின் திரைப்பட உரிமையை  வாங்கிய பிரபல நிறுவனம்..!

 

SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான்  விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் *ஒளி*  நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.
கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.  அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன  . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில்  பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் . “பாயும் *ஒளி*  நீ எனக்கு ” திரைப்படம் தமிழ்த் துறையில் அவரது இசை அறிமுகத்தைக் குறிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். பி.எல். சுபேந்தர் (கலை இயக்குனர்), தினேஷ் காசி (ஸ்டன்ட் இயக்குனர்), மற்றும் ராஜகிருஷ்ணன் – 4 Frames (ஒலி கலவை), சதீஷ் – AIM (PRO) ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.
SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல்  என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் SP சினிமாஸ்,  K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), ஓ மனபெண்ணே (ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. . SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றி படங்களை விநியோகித்துள்ளது, அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘பாரம்’ ஆகியவை  குறிப்பிடத்தக்கவை.
Previous Post

“அயலி”

Next Post

மீண்டும் நடிகர் சதிஷ் நடிக்கும் Production No 3 பட பூஜை..!

Next Post

மீண்டும் நடிகர் சதிஷ் நடிக்கும் Production No 3 பட பூஜை..!

Popular News

  • ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.