• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் “சண்டே” ( Sunday ) !!!

by Tamil2daynews
February 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் “சண்டே” ( Sunday ) !!! 

 

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட் சைஃபை படங்கள் இங்கு திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால்  நம் தாய்மொழியில் அதிகமாக சயின்ஸ் பிக்சன் படங்கள் உருவாவதில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில், இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம்.
இப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இருவருமாக இணைந்து இப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு அசத்தலான சயின்ஸ் பிக்சன் படமாக இப்படம் இருக்கும்.
இப்படத்தில் ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி  நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா & மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒரே கட்டமாக ஊட்டியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திரையில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது அனுபவமாக இப்படம் இருக்கும்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்ப குழு 
தயாரிப்பு நிறுவனம் : Evolution entertainment
இணை தயாரிப்பு : Blueberry studios
எழுத்து & இயக்கம் : சதீஷ் கீதா குமார் & நந்தினி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு , படத்தொகுப்பு : சதீஷ் கீதா குமார்
இசை : செந்தமிழ்
பாடல்கள் : கவி கார்கோ
ஸ்டன்ட்  : டேன்ஜர் மணி
கலை : தினேஷ் மோகன்
உடைகள் : அக்‌ஷியா & விஷ்மியா
மேக்கப் – பிரின்ஸ் பிரேம்
Previous Post

விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்

Next Post

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

Next Post

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.