• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘திருடன் போலீஸ்’ புகழ் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ (தமிழ்) திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது

by Tamil2daynews
February 24, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘திருடன் போலீஸ்’ புகழ் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ (தமிழ்) திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது

 

நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்தால் இயக்கப்படும் திட்டங்கள் ஒரு புகழ்பெற்ற பிராண்டின் Midas தொடுதலைப் பெறும்போது, அது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக மாறும். SP சினிமாஸ் தமிழ் திரையுலகின் மதிக்கப்படும் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று. அந்த நிறுவனம், இது போன்ற நம்பிக்கைக்குரிய திட்டங்களை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது.
ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸின் திரு. ராஜ் சேகர் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை SP சினிமாஸ் இப்போது கைப்பற்றியுள்ளது.
Image
அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை வழங்கி திரையுலகில் நற்பெயர் பெற்றுள்ளது SP சினிமாஸ். குறிப்பிடத்தக்க வகையில், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் முறையான உத்திகளைத் திட்டமிடுதல், வர்த்தக வட்டத்தில் இணக்கமான மற்றும் நம்பகமான விதிமுறைகளை உறுதி செய்தல், படத்திற்கான கவனக்குவிப்பை ரசிகர்களிடையே உருவாக்குதல் மற்றும் பெரிய திரை எண்ணிக்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், SP சினிமாஸின் கோல்டன் டச் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. ‘சூர்ப்பனகை’ படத்திற்கும் இதன் மூலம் சிறப்பான கவனம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஃபேண்டசி- த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘சூர்ப்பனகை’ திரைப்படம், 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். சில தனித்துவமான பழங்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். இது சில மர்மமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம்  கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
உலகளாவிய வெளியீடு: SP சினிமாஸ்,
தயாரிப்பு: ராஜ் சேகர் வர்மா,
தயாரிப்பாளர்: ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்,
இயக்குநர்: கார்த்திக் ராஜு,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவாளர்: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சாபு ஜோசப்,
கலை இயக்குநர்: சீனு,
சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்புராயன்,
பாடலாசிரியர்: சாம் சிஎஸ்,
நடனம்: ஷெரிப்,
வண்ண மேற்பார்வையாளர்: க்ளென் காஸ்டினோ,
திட்ட வடிவமைப்பாளர்: கே. சதீஷ் (சினிமாவாலா),
கிரியேட்டிவ் ஹெட்: அஷ்வின் ராம்,
ஒலிக்கலவை: டி.உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்),
DI: ஃபயர் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்,
கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜெயலட்சுமி,
வடிவமைப்பு: Tuney 24AM,
தயாரிப்பு நிர்வாகி: கே.ஆர்.பாலமுருகன்
Previous Post

“அரியவன்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

Next Post

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! “கருமேகங்கள் கலைகின்றன”

Next Post

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! "கருமேகங்கள் கலைகின்றன”

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.