• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

by Tamil2daynews
March 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா  கூட்டணி ! 

 

தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில்,  திரையில் இணைந்து தோன்றவுள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார்.
ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன்  இணைந்தார். அதற்கடுத்து  முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இணைந்திருப்பது,  ரசிகர்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தியுள்ளது. லைலாவும், சிம்ரனும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தக்கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.
தமிழ் சினிமாவின் தொடர் காமெடி ஹாரர் படங்களிலிருந்து ரசிகர்கள் இளைப்பாறும் வகையில்,  ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஈரம் படத்தின் வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் தன் புதிய பயணத்தை துவங்கியுள்ள இயக்குநர் அறிவழகன் Aalpha Frames  நிறுவனம் சார்பில், 7G Films  நிறுவனத்தின் தயாரிப்பாளர் சிவா உடன் இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Previous Post

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது!!

Next Post

D3 – விமர்சனம்

Next Post

D3 - விமர்சனம்

Popular News

  • ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.